Wednesday, November 2, 2011

உனக்குத் தெரியுமா..?



ஒரு இரவு
தூக்கம் என் கண்களை
அதிகம் தழுவிய போதும்
உன் வார்த்தையால்
என் விழியோரம்
எண்ணெய் ஊற்றினாய்
அந்த இரவு தூக்கமின்றி
உன் வார்த்தையோடு
கடினப்பட்டுக் கொண்டது...


தமிழை அமுதமாய்
உறிஞ்சிக் குடிக்கும் நீ
அந்த மொழியால்
என் மனதை பலவீனப்படுத்துகிறாய்
வார்த்தைகளால் வெறுக்கும் நீ
வானமளவு பொழியும் அன்பை
உன் மனதுக்குள்
குடை கொண்டு மறைத்து வைத்திருக்கிறாய்...


புறாவைப் போல்
பறந்து திரியும் நீ
உன் நினைவுகளுடன் போராடும்
என்னுடன் சன்டை பிடிக்கிறாய்
உன் ராச்சியத்தில்
சிட்டுக் குருவி போல் அமர வரும் போதெல்லாம்
உன்  விழியின் கற்கள் கொண்டு
என்னை விரட்டுகிறாய்
அப்போதெல்லாம் கண்ணாடியாய்
நொறுங்கிப் போகின்றேன்...


கண்கள் கண்டதெல்லாம்
படம் பிடித்துக் கொள்ள
நான் ஒரு சினிமாக்காரனல்ல
இதயம் தொட்ட உன்னை
கண் கலங்காமல் காக்கும்
உந்தன் காவலன்...


எப்போதும்
பிரிவை வேண்டி நிற்கும் உன்னிடம்
ஒரு பூனைக் குட்டியைப் போல்
உன் அன்புக்காய்
தவமிருக்கிறேன்...




2 comments:

  1. உன் ராச்சியத்தில்
    சிட்டுக் குருவி போல் அமர வரும் போதெல்லாம்
    உன் விழியின் கற்கள் கொண்டு
    என்னை விரட்டுகிறாய்

    அருமை
    வாழ்த்துகளுடன்
    எஸ் .மதி

    ReplyDelete
  2. Mathi said..மிக்க நன்றி நேரம் கிடைக்கும் போது எனது வலைத்தளத்தையும் வாசியுங்கள் உங்கள் காத்திரமான கருத்துக்களையும் சொல்லுங்கள்....

    ReplyDelete