உன் குரலை கேட்பதற்காய்
நான் தவமிருக்கையில்
நீ பேசாமல் இருப்பது
என்னை வருத்தப்படுத்துகிறது
இந்த குயிலின் ஓசையின்றி
நாட்கள் கவலையோடு நகர்கிறது...
முகவரி தவறிய
கடிதங்களைப் போல்
உன் கைத் தொலை பேசியும்
என்னிடமே திரும்பி வருகின்றன
விலாசம் தேடி அலுத்துப் போன
தபாற் காரனைப்போல்
உன் இலக்கத்தை பல முறை அழுத்தி
பயனற்றுப் போகையில்
என் விரல்கள் தெலைபேசியிடம் சண்டை பிடிக்கின்றன...
குழந்தையைப் போல்
அடம்பிடிப்பது உன்னிடம்தான்
சில வேளை குழந்தைத் தனமாய்
பேசும் போது தவறிழைத்தால்
உன் மனச்சிறைக்குள் வைத்து
தண்டனை தா
உன்னை விட்டு பிரியும்
சக்தி எனக்கில்லை...
உன் மனசு
என் வார்த்தைகளால்
காயப்பட்டால் மன்னித்துக்கொள்
நீயின்றி வெறிச்சோடிப் போகும்
என் வாழ்க்கைக்கு வசந்தம் தர நீதான் வேண்டும்...
என் கலையாத காதல்
கனவாகிப் போன கதையை
உன்னிடம் இறக்கி வைத்த பிறகும்
ஏன் கோபித்துக் கொள்கிறாய்
கலைகளை நன்கு கற்ற நீ
என் மனக் கவலைகளை
ஏன் புரியாமல் போகிறாய்...
குழந்தையைப் போல்
ReplyDeleteஅடம்பிடிப்பது உன்னிடம்தான்..அருமை....
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் என் வலைப்பூவை வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...
ReplyDelete//குழந்தையைப் போல்
ReplyDeleteஅடம்பிடிப்பது உன்னிடம்தான்
சில வேளை குழந்தைத் தனமாய்
பேசும் போது தவறிழைத்தால்
உன் மனச்சிறைக்குள் வைத்து
தண்டனை தா
உன்னை விட்டு பிரியும்
சக்தி எனக்கில்லை.
//
பின்னிடிங்க
"என் ராஜபாட்டை"- ராஜா மிக்க நன்றி தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.உங்கள் பதிவையும் தொடர்ந்து வாசிக்கின்றேன்...
ReplyDeleteஎன் தேசத்தில்
ReplyDeletehttp://kathalthesam-vathany.blogspot.com/2011/11/blog-post_22.html
மிகவும் ரசித்துப் படித்த வரிகள் மிக்க நன்றி..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கடவுள்களை தொலைத்து விட்டோம்
மிக்க நன்றி♔ம.தி.சுதா♔ உங்கள் பதிவால் நானும் மகிழச்சியடைகிறேன்..தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...
ReplyDelete