Sunday, November 14, 2010
அகதியான காதலியின் விலாசம் தேடி........
உன்னை
தேடி வந்தேன்.உன் தெருவுக்கு
நீண்ட நாட்களுக்கு பிறகு
கல கலப்பும் எழிலும்
வசந்தங்களும் வீசுகின்ற உன் தெருவில்
அசிங்கங்களும் மனிதவாடையும்
வரவேற்றன.....
பூட்டப்பட்ட உன் வீடும்
தேய்ந்து போன நாயும்
செத்துப்போன
மரம், செடி,கொடிகள்
தூரத்தில் ஆயுதம் தரித்த சில மனிதர்கள்
வேறு யாருமில்லை....
நானும் நீயும் வசந்தங்கள் மணக்க
கதை பேசி மகிழ்ந்த உன் முற்றம்
பற்றைக் காடாய்...........
என்ன செய்வது
விதி இதுதானென்றுவந்த வழி திரும்பினேன்
இருந்தாலும்,
நீ இல்லாத சோகம் வழி நெடுகிலும் கண்ணீராய்
கண் மணியே நீ எங்குள்ளாய் அகதியாய்..
உனது விலாசத்தை தாபாலிடு
அங்காவது வந்து
உன்னை சந்திக்கிறேன்..........
( 02.12.2007...ஞாயிறு தினக்குரலிலும் பார்க்கலாம்)
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
Nyc
ReplyDeleteபார்த்தேன் ரசித்தேன்
ReplyDeleteஉங்கள் வரவுக்கு ரொம்ப நன்றி.என் பதிவுக்கு முதலாவதாக வந்த பெருமை உங்களையே சாரும் தொடர்ந்தும் காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்...............
ReplyDelete