உனக்கான கவிதை
என்னிடமே திரும்பி வருகின்றன
பாவியின் பிரார்த்தனையைப் போல.....
உன்னால் வந்த கவிதை
உன்னாலேயே ஏளனம் செய்யப்படுகிறது
இதுவென்ன கவிதையென்று
பாவம் கவிதை
என் இதயம் பேசிய
ஒற்றை ஞாபகங்ளை
நீ திருடிக் கொள்கிறாய்
நான் கதறக் கதறக்...........
வந்தவைகளையும்
போனவைகளையும்
பேசியவைகளையும்
கவிதை யென்றேன் நான்,
கதை யென்றாய் நீ....
நீ கதை யென்றாலும்,
காவியமென்றாலும்
எனக்கொன்றுமில்லை,
நான் எனக்குச் சொந்மான கவிதையொன்றுடன் புறப்படுகிறேன்........................
அஸ்கர் நீங்க யாருக்காக கவிதை வரைந்தீர்களோ? இன்னொரு கவிதையை எழுதும் ஆர்வத்தில் முன்னைய கவிதைக்காரணியை புறம் தள்ளல் சரியோ?
ReplyDeleteஎந்தக் கவிதையையும் புறந் தள்ள வில்லை சிலரின் உணர்வுகள் அவ்வளவுதான்......
ReplyDelete