விழித்து,விழித்து..
தூங்க வேண்டியிருக்கிறது..
ஒர் அகதியைப் போல்....
திடீரென கண்களைத் திறக்கும்
அதிகாலைப் பொழுதில்..
இதயம் ஒரு கணம்
நின்ற துடிக்கிறது....
கூதலின் சாரலுக்குள்
நீந்துகிறது ஆத்மா..
வாடகை வீட்டுக்காரனைப் போல்
திகதி குறிக்கிறது மனசு...
நம்பிக்கையிழந்த
நாளைக்காய
காத்திருக்கும் கிழவனைப் போல்..
தவமிருக்கிறது என் இதயம்
கிடைக்தாத ஒன்றுக்காய்.........
மாற்றத்துக்காய நகர்கிறது
என் பாதங்கள்..
நகர்கையில்..,
காலங்கள் செய்யும் கோலங்கள்..
எத்தனை...
மிட்டாய்க்காய் துடிக்கும்
அப்பாவிக் குழந்தையைப் போல்
யார்,யாருக்கெல்லாம் ஏங்குகிறது
குழந்தைத் தனமான,என் மனசு.....
காதலியின் வருகையில்..
ஏமாந்து போகும் காதலனைப் போல்..
என் மனசும்,இதயமும் கழற்றி வைக்கப்பட்டு..
விடிந்து போகிறது..
ஒவ்வொரு இரவும்.................
கவிதையை ரசித்தேன்,ஆழங்கள் புரிந்தன...ஒரு நிமிடம் கண்களும் தங்களின் கவிதைக்காய் நனைந்தன... ஏதோ ஒரு விடயத்துக்காக உங்கள் மனம் நிம்மதியற்று தடுமாறுவதை உணர்கிறேன்.எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..
ReplyDeleteசப்னா,...என் கவிதை உங்களால் புரியப்பட்டிருக்கிறது.கவிதைகள் ஒருவருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதா..?கண்ணிரைக் கொடுப்பதா..?உணர்வுகளை கவிதையாக்குகின்றபோது அது தவிர்க்க முடியாமல் போகிறது........அனுதாபமா...............????????
ReplyDelete