மென்மையான மழைத் துளியோடு வீசிய காற்று,என் உடலைக் குளிர்மைப்படுத்திக் கொண்டிருந்தது.ஒரு காலைப் பொழுதில்,நண்பர் கமாலின் வீட்டை பல வருடங்களுக்குப் பிறகு தேடிப் போயிருந்தேன்.மாத்தளை மாவட்டத்தின் வரக்காமுறை எனும் இடத்தில் அவரின் வீடு அமைந்துள்ளது(மாத்தளை என்று குறிப்பிடுகின்ற பொழுது ஒருவர் ஞாபகத்திற்கு வருகிறார்,வேறு யாருமில்லை நண்பர் அபாஸ்முஹம்மட்,அறிவிப்பாளராக நுழைந்து இப்போது வசந்தம் வானொலியின் செய்திகளுக்கு பொறுப்பாகயிருக்கின்றார்,இனிய நண்பர் மனதில் பட்டதை சட்டென சொல்லக்கூடியவர் இவரைப் பற்றி தனியான பதிவில் சொல்வேன். சரி நம்ம விடயத்திற்கு வருவோம்.உயர்ந்த மரங்களும்,மலைமுகடுகளும் நிறைந்த பாதையைக் கடந்து அவரது வீட்டை ஒருவாரு கண்டுபிடித்தேன்.நண்பர் கமாலின் வீட்டைப்பார்த்ததும் சோகம் நிறைந்த அதிர்ச்சி எனக்குள்,ஒரு காலத்தில் வானொலி,தொலைக்காட்சியில் தனக்காக தனியிடம் பிடித்து கலக்கியவர்,ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்துக்கொண்டவர்,நல்லாயிருந்தவர்தானே இவருக்கா இந்த நிலை கமாலின் வீட்டுச் சூழலைக் கண்டு அதிர்ந்து போனேன்.
ஒருவாராக என்னை சுதாகரித்துக் கொண்டு அவர் வீட்டின் கதவைத் தட்டி கமால் இருக்கிறாரா என்று கேட்டேன்.அவர்தான் கதவைத்திறந்தார்.கதவைத்திறந்த கமால் என்னைப்பார்த்தர்.இது கமால்தானா என என்னை ஒரு கணம் எண்ணவைத்தது.அவரது வீடு கட்டிய குறையில் பூசப்படாமல்,மழையில் நனைந்து ஆங்காங்கே செங்கல் கரைந்து போயிருக்கிறது.அவரும்,அவரது வீட்டுச்சூழலும் நண்பர் கமாலின் சோகங்களையும்,அவலங்களையும் கட்டியம்கூறி நிற்கிறது.என்னை அன்னார்ந்து பார்த்து உள்ளே வாங்க என்றார்.உள்ளே நுழைய
ஒரு அடி எடுத்து வைத்தேன்.என் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.நண்பா உனக்கா இந்த நிலை.பெயரோடும்,புகழோடும் உலா வந்த கமாலா.....வீட்டுக்குள் உறைந்து போயிருப்பது.நண்பரை ஆறத்தழுவி விசாரித்த பின் அங்கிருந்து கண்ணீரோடு விடை பெற்றேன்.
No comments:
Post a Comment