Monday, December 13, 2010

விலாசமில்லாத திசை...........

விழித்து பார்க்கிறேன்
வழி நெடுகிலும் புது முகங்கள்
விலாசமிட்டிருக்கின்றன......

துப்பாக்கி ஏந்திய
ஒரு ஏகாதிபத்தியம்
மூலை முடுக்கெல்லாம்
முகாமிட்டிருக்கின்றன.....

நேற்று வரை
நான் உருண்டு புரண்டு விளையாடிய
என் ஊருக்கா இந்த கெதி.......

ஆறத் தழுவிய உறவுகள்
ஓய்வின்றி சேர்த்த சொத்துக்கள்
எல்லாமே அந்நியமாகிவிட்டன......

இப்போதிங்கு..,
எல்லோருமே புது முகங்கள்...
ஏப்பமிட்டுத் திரிகின்றன
எங்களது பூர்வீக பூமியென்று......

என்ன செய்வது
யாருடையதோ பசிக்காக
எனது கிராமமும் பலியாகிறதே........
துப்பாக்கி முனைகளில் வெளியேறுகின்ற.,
துர்ப்பாக்கியத்தில்...,
திசை தெரியாது நிற்கிறோம்............

ஏ.எம்.அஸ்கர்

(2006 ஜனவரி மாத எழுவான் பத்திரிகையிலும் பார்க்கலாம்)

1 comment:

  1. அருமையான கவிதை... பகிர்வுக்கு நன்றி சகோ..

    ReplyDelete