Thursday, December 30, 2010

உன்னாலான ரசனை.......


கோபத்திலும்
உன்னால் மட்டும்
எப்படி அமைதியாயிருக்க முடிகிறது...

நான் ஆரவாரப்படும் பொழுதெல்லாம்
ஓரப்பார்வை பார்த்து
உன் சிறு புன்னகையால்
என்னை ஆசுவாசப்படுத்துவாய்
எப்படி இந்த கலையைக் கற்றுக் கொண்டாய்.....

சில நேரம்
இமை வெட்டாமல்
நான் பார்க்கும் போது
வளைந்து,நெளிந்து போகிறாய்
அந்த வளைதலிலும்,நெளிதலிலும்
எத்தனை அழகு இருக்கிறது
அது உனக்குத் தெரியுமா........

நீ
அழகாய் வரும் போது
இவள் மனைவியாகக் கூடாதா.?என்பது பலரின் பிரார்த்தனை
அழகுருவமெடுத்து
பல இதயங்களை கவர
உன்னால் எப்படி முடிகிறது........

நீ
உதடு விரித்து
புன்னகைக்கிறாய்
நான் உன்னில்
சரிந்து விழுகிறேன்..
நீ
கவிதையை
அதிகம் ரசிக்கிறாய்
உன்னை ரசிப்போர்
அதிகம் பேர் நீ அறிவாயா...?

காதலன் கனவு வரை
கணவன் கல்லரை வரை
இது
நீ அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை
எப்படி உன்னால் இந்த தத்துவத்தை
கற்பனை பண்ண முடிந்தது....
ஆக!நீ கற்பனையின் நாயகியா....?


கணவனுக்கு அன்பான மனைவியாய்
பிள்ளைகளுக்கு பாசமுள்ள தாயாய்
உறவுகளுக்கு நல்ல தோழியாய்
எப்போதும் நீ இருப்பாய்..
அது உன் ஒவ்வொரு அசைவிலும்
எனக்குத் தெரிகிறது.........


இப்படியெல்லாம்
இருக்கும் நீ கவிதையை படிக்கிறாய்..
நான் உன்னை படிக்கிறேன்.........

2 comments:

  1. உங்கள் கவிதையை வாசிக்கும் போது எனக்கு பல படங்களின் பெயர்கள் ஞாபகம் வருகிறது..அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது,உன்னாலே உன்னாலே,பிரியாத வரம் வேண்டும்,அவள் அப்படித்தான்...இன்னும் பல...

    ReplyDelete
  2. நன்றி சப்னா.....என் கவிதை உங்களுக்கு படங்களை ஞாபகப்படுத்தியிருக்கிறது..மகிழ்ச்சி ..தொடர்ந்து வாசியுங்கள் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்...என்ன உங்க வலைப்பக்கம் ஒன்றையும் காணல்ல...........

    ReplyDelete