Thursday, December 16, 2010

திங்கள் வசந்த நிலா.....2010.08.30....

மீனவக் குடும்பத்தில் பிறந்த சப்னாவின் கணவரும் மீன் பிடித் தொழிலாளி,அவளது கணவரான ஷாக்கீர்,கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கம்.ஒரு நாள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்,விடிந்தும்,திரும்பி வரவேயில்லை.மழையோடு வீசிய புயல் அவரை எங்காவது கொண்டு போயிருக்குமோ..?அல்லது கடலுக்குள்தான் அமிழ்த்தியிருக்குமோ..?இப்படியாக பல எண்ணங்கள் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது அவளது மனசை,அவள் தேடியும் அவர் கிடைக்கவில்லை.என்னாச்சோ இன்னும் தெரியவில்லை.நாளாந்த வருமானத்தோடு வாழ்க்கையை நகர்த்திய சப்னா பின்னர்,விதவையாகிறாள்.சப்னாவுக்கு கைக் குழந்தையொன்றும் இருக்கிறது.வறுமை அவளையும் தொற்றிக் கொள்கிறது.என்ன செய்வது வறுமையின் ஆற்றாமையினால்,ஊரில் வசதி படைத்தவர்களின் முகத்தை சோர்ந்த மனசோடு பார்ப்பாள் சப்னா,ஆனால் அவர்களோ!அவளது சோர்ந்து கிடக்கின்ற முந்தானையத்தான் பார்ப்பார்கள்.அநாதரவற்ற அவளை சில கழுகுகள் வேட்டையாட சுற்றித்திரிவதால்,அவள் தனது குடும்ப நிலமையை மற்றவர்களிடம் சொல்ல பயப்படுகிறாள்.


இந்த நிலமையில் இருக்கும் பெண்ணுக்கு பொருத்தமான உங்கள் கவிதை எப்படி..?நேயர்களின் கவிதைக்காய் வசந்த நிலாவில்,ஒலிபரப்பான பிரதி.........

4 comments:

  1. அடப்பாவி அஸ்கர்..என்னோடு அப்படி என்ன கோபம்? வேறு பெயர் கிடைக்கவில்லையா?

    ReplyDelete
  2. மனித வாழ்க்கையில் இடம் பெறுகின்ற சில அவலங்களை காற்றலையில் பேசிய போது இதுவும் ஒரு சம்பவமாக பேசினேன்.அவ்வளவுதான்.சிலரின் மனசுக்குள் அடங்கிப்போகும்.சில சம்பவங்களை உங்களில் ஒருத்தராக நின்று காற்றலையில் வெளிச்சம் போட்டேன்.சப்னா என்ற அந்தப் பெயர் எதர்ச்சையாக வந்ததுதான். ஒஹோ...இந்த நாட்டில் இருக்கும் அத்தனை சப்னாக்களும் அடப்பாவி என்று திட்டப் போறார்களோ...

    ReplyDelete
  3. நாட்டில் உள்ள சப்னாக்கள் எல்லோரும் அடப்பாவி என்பார்களா எனபது பற்றி எனக்குத் தெரியாது,ஆனால் உங்களைத் தெரிந்த ஒருவள் என்பதால் ஒரு ஆதங்கத்தில் கேட்டேன். நாளைக்கே நான் ஒரு கற்பனைச் சம்பவத்தை உருவாக்கி அதில் வரும் அழகிய இளைஞன்(காதலன்) பாத்திரத்திற்கு உங்கள் பெயரை வைத்தால் நீங்கள் அடப்பாவி என்று சொல்லவா போறீங்க..

    ReplyDelete
  4. நன்றி சப்னா..அப்படி சொல்ல மாட்டேன்...என்ன சொல்வது புரியாத புதிர்...

    ReplyDelete