எங்களைக் காத்த கடல்
வேறோடு பிடுங்கியெறிந்த மாயமென்ன..
எங்கள் சொத்துக்களை,
சுருட்டிப்போன வேகமென்ன....
எப்போதும் கடலை நம்பிய உறவுகள்
சுனாமி வந்து உயிர்களை பிடுங்குமென்று நம்பியதுண்டா........
மரணங்களைக் கொண்டு வந்த
சுனாமியே..உன்னை மறப்பது எப்படி..
தூங்கும்போதும்,விழிக்கும் போதும்
என் உம்மா கண் முன்னே மகனே என்கிறாள்
வாப்பாவிடம் காசு கேட்கிறேன் மிட்டாய் வாங்க
தம்பி எனக்குத் தெரியாமல் என் சேட்டைப் போட்டுப் போகிறான்
தங்கச்சி வந்து நானா கடைக்குப் போனாள் சொக்லெட் வாங்கித்தாங்கவென்று
அடம் பிடிக்கிறாள்..பக்கத்து வீட்டுக்கார நண்பன்
விளையாடுவதற்காய்
கிரிக்கெட் மட்டேயோடு நிற்கிறான்
என் வீட்டு வாசற் படியோரம்..................
காதலி இரவில் வந்து தூக்கம் தொலைக்கிறாள்
இப்படி பல நினைவுகள் மாத்திரம்தான் மீதமிருக்கிறது
இவர்கள் மீளாப் பயணத்தில்,சுனாமியின் அரவனைப்பில்
மண்ணுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்...........
அதிர்வுகளை ஏற்படுத்தி
உள்ளங்களை அதிர வைத்தாய்
அஞ்சாத மனிதர்களை அச்சம் கொள்ள வைத்தாய்
நீ ஊருக்குள் வந்து அதிசயங்கள் பல நிகழ்த்தினாய்........
கஞ்சிக்கும் வழியின்றி
கஷ்டப்பட்ட மனிதர்களை
எட்டியும் பார்க்காத பணக்காரர்கள்
ஏழை வீட்டில் அடைக்கலமானதும் அன்றுதான்
சுனாமி பொதுவானது அதனாலதான் பாகுபாடின்றி தாக்கியது...........
மனிதன்.....மனிதனை வேட்டையாடும்
இப் பூமியில்,
இயற்கையின் கோபம் எத்தனை கொடூரமானது
ஆக!சுனாமி நமக்கு பாடம் கற்றுத் தந்திருக்கின்றதல்லவா..?
ஒரு உயிரின் இழப்புக்கே
தலையில் அடித்தழும்
நம் தாய்மார்கள்
இலட்சக்கணக்கான பிள்ளைகளை
சுனாமியிடம் பறி கொடுத்து
எப்படி அழுதிருப்பார்கள்..........
முத்தமிட்டு முத்தமிட்டு
பழகிய பல உறவுகள்
மூக்கைப் பொத்திக் கொண்டு
உறவுகளின் உடல்களைத் தேடியதும் சுனாமியன்றுதானே.....
கடற்கரையில் மீன்களைத்தான் அள்ளியெடுத்தோம்
சுனாமி மனிதப் பிணங்களையல்லவா..அள்ளியெடுக்கவைத்தது........
ஆறாத வடுக்களைத் தந்து
அடக்கமாய் அலையடித்துக் கொண்டிருக்கும் கடலே
இனியும்...ஊருக்குள் வருவாயோ....
வந்து விடாதே.....
நீ வந்தால் யார்தான் இங்கு மீதமிருப்பார்கள்........
சுனாமி 2004இல் தான் பிறந்தது...அப்போதே அவ்வளவு அட்டகாசம் புரிந்த அதற்கு இப்போது வயது ஆறு...பரவாயில்லை ஆறு வருடங்களிலும் அடக்கமான பிள்ளையாகத்தான் இருந்தது...நன்றிகள்.. ஆனாலும் இனி வரும் நாட்களில் அதன் வயதும்,வளர்ச்சியும் அதிகரித்துதானே செல்லும்... இறைவா அதன் வருகையையோ வளர்ச்சியையோ காண யாரும் துளியும் நினைக்கவில்லை...ஆக அதனைக் கொன்றுவிடுவதே நீ படைத்த மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் கொடையாகும்...இறைவா நீ படைத்த ஜீவராசிகள் அனைத்தையும் நீயே காப்பாற்று.!
ReplyDeleteநன்றி சப்னா....உலகத்தைப் படைத்த இறைவன்.உலகம் எப்படி இயங்க வேண்டும் என்பதை வரையறுத்துள்ளான் அல்லலா,?பாவங்கள் அதிகரிக்கும் போது தண்டனைகளும் அதிகரிக்கும்.சமுதாயம் திருந்தாத போது.அந்த சமுதாயத்தை இறைவன் ஒரு போதும் திருத்தப்போவதில்லை.......
ReplyDelete