நேற்று வீசிய காற்று
என் வீட்டு கூரையை
பிரித்துப் போனதைப் போல்
உனதான ஞாபகங்களும்
என்னிடமிருந்து பிரிகிறது........
உயிர்த்தெழும்
என் முற்றத்து மாமரத்தைப் போல்
நமது காதலும் வளர்க்கப் பட்டது
உன்னாலும்,என்னாலும்.......
மானமுள்ள காதலென்று
மனசு வைத்து மனுக் கொடுத்தோம்.
பின்னர்,.மானங்கெட்ட காதலென்று
நிராகரிக்கப் பட்டோம் அந்த மனசாலேயே......
பிரிவோம் என்றிருந்தால்..,
சந்திப்புக்களை தவிர்த்திருக்கலாம்..
இணைவோம் என்றுதான் சத்தியம் செய்தோம்..
பின்னர்.,ஒப்பந்தங்கள் கிழிக்கப் பட்டது எப்படி...?
அடை மழைக்குப் பின்னரான..,
அமைதியைப் போல்..
ஏதோவொன்றை நிகழ்த்திவிட்டுப் போய்யிருக்கிறாய்
என்னுள் நீ.....
இத்தனையும் நிகழ்ந்தது..
திகதி குறிக்கப்பட்ட..
உனது திருமண அழைப்பிதழ்
எனது முகவரிக்கு வந்த போது..............
இதுவும் வாழ்க்கைப் பகுதியே
ReplyDeleteநன்றி ............வாழ்க்கை..........
ReplyDeletesupper...... wsh u al da bst....
ReplyDeleteகவிதை மிக அழகாக உள்ளது !
(பிரிவோம் என்றிருந்தால்..,
சந்திப்புக்களை தவிர்த்திருக்கலாம்..
இணைவோம் என்றுதான் சத்தியம் செய்தோம்..
...பின்னர்.,ஒப்பந்தங்கள் கிழிக்கப் பட்டது எப்படி...? - nce )
மீண்டும் வாழ்த்துக்கள் ..!
நன்றி.....என் பதிவை வாசித்து உங்கள் கருத்துக்களை தொடர்ந்து,எழுதுங்கள்.....என் கவிதை வரிகளை தொட்டிருக்கிறீர்கள் .......நன்றி........
ReplyDeleteவாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே ,,,
ReplyDelete