Wednesday, January 11, 2012

விழியின் வலி...



என் இளமையை தின்று
அவள் வீசிய பார்வையால்
மயங்கி நின்ற அவளின் விழியோரம்
காதலாய் கவ்விக்கொண்டேன்...


உன் கூட்டுக்குள்
என்னை முடக்கியது போல்
உன் விழிகளுக்குள்
யார் யாரையெல்லாம் மறைத்து வைத்திருக்கிறாய்...


புனிதம் போர்த்திய உன் பார்வை
எனக்கு சொந்தமென்று நம்பியிருந்தேன்
இன்னுமொருவனுக்கு
உன் பார்வையை வாடகைக்காய் அனுப்பிய போது
அது காமமாய் அலைந்தது...


இப்போது
பல தெருக்கள் கடந்து
நீ மணம் வீசுகிறாய் கண் கவர் காதலியென்று
உன் விழியோரம் மேய்ந்த என் காதல்
ஊர் தாண்டி அழுகிறது
இவன் காதல் பாவமென்று...


உந்தன் இனிப்புக்காய்
கரையானாய் அலைந்தேன்
உன் உணர்வுகளில் வெட்கமானேன்
ஆனால்,இப்பொழுதுகளில்
எந்தன் விழிகள் உன்னுடன் முரண்படுகிறது
அவ்வேளைகளில் என் கண்கள் சிவக்கிறது...




4 comments:

  1. //இப்போது
    பல தெருக்கள் கடந்து
    நீ மணம் வீசுகிறாய் கண் கவர் காதலியென்று
    உன் விழியோரம் மேய்ந்த என் காதல்
    ஊர் தாண்டி அழுகிறது
    இவன் காதல் பாவமென்று...


    உந்தன் இனிப்புக்காய்
    கரையானாய் அலைந்தேன்
    உன் உணர்வுகளில் வெட்கமானேன்
    ஆனால்,இப்பொழுதுகளில்
    எந்தன் விழிகள் உன்னுடன் முரண்படுகிறது
    அவ்வேளைகளில் என் கண்கள் சிவக்கிறது
    //

    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. என் ராஜபாட்டை ராஜா..என் கவிதை மீதான உங்கள் அவதானம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது மிக்க நன்றி தொடர்ந்தும் என் கவிதை பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்..

    ReplyDelete
  3. உன் கூட்டுக்குள்
    என்னை முடக்கியது போல்
    உன் விழிகளுக்குள்
    யார் யாரையெல்லாம் மறைத்து வைத்திருக்கிறாய்...
    அருமையாக உள்ளது .
    என் தளத்துக்கும் உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete