Thursday, December 30, 2010

நட்புகளின் பிரிவு....



சிலரின் நட்பைப்பார்த்து ஊரே பொறாமைப்படும்.அந்தளவிற்கு அவர்களது நட்பு ஆழமாய் காணப்படும்.இப்படிப்பட்ட நட்பாகத்தான்.றமீஸ் மற்றும் றிம்ஸானின் நட்பு காணப்பட்டது.பல வருடங்களாக எந்த நிலையிலும் பிரியாமல் அன்பாய்,நட்பாய் பழகி வந்தார்கள்.பலரும் மூக்கில் விரல் வைத்து பேசிக் கொள்ளும் இவர்களது அற்புதமான சிநேகிதத்தில் திடீரென விரிசல் ஏற்படுகிறது.காரணம் றிகாஸா என்ற பெண் இவர்களின் வாழ்க்கையில் நுழைகிறாள்.றிகாஸாவை றமீஸ் காதலிக்கிறாள்.இவர்களது காதலும் நீடிக்க காலப்போக்கில்,றிகாஸா றமீசுக்கு பல கட்டளைகள் இடுகிறாள்.றமீசும் றிம்ஸானும் பழகும் நட்பைப்பார்த்து அவள் பயப்படுகிறாள்.இவர்களது இறுக்கமான இந்த நட்பால், தன் மீதான பாசம் குறைந்து விடுமோ என்று  அஞ்சியவள் அவள் தன் காதலனான றமீஸை றிம்சானோடு பேசுவதை குறைத்து விடுமாறு சொல்கிறாள்.இதன் பின்னர் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது.


சிறு வயது முதல் நட்பாயிருந்த றிம்சானோடு அவனால் பேசாமல் இருக்க முடியவில்லை.அன்பான காதலியையும் கரம் பிடிக்க வேண்டும்.காதலியை வெறுப்பதற்கும்  அவனால் முடியவில்லை. ஆக!நட்பா, காதலா,என்ற குழப்பத்திலிருக்கும் இவனைப்பார்த்து நான் சொன்னேன்....




பாசத்தோடு பழகிய நட்பு
அவளது இதயத்தில் கரைந்து நிற்கிறது
பார்த்து பார்த்து பிரியும் விழிகளில் பிதுங்கி நிற்கிறது
பல வருடங்களாய் பயணித்த அன்பு
அவள் பாதத்தில் மண்டியிடுகிறது
பழகிய உறவுகள் பிரியும் வலி
எனக்கும் புரிகிறது.........
(இது வசந்த நிலாவில் நேயர்களின் கவிதைக்காய் ஒலிபரப்பான பிரதி)

உன்னாலான ரசனை.......


கோபத்திலும்
உன்னால் மட்டும்
எப்படி அமைதியாயிருக்க முடிகிறது...

நான் ஆரவாரப்படும் பொழுதெல்லாம்
ஓரப்பார்வை பார்த்து
உன் சிறு புன்னகையால்
என்னை ஆசுவாசப்படுத்துவாய்
எப்படி இந்த கலையைக் கற்றுக் கொண்டாய்.....

சில நேரம்
இமை வெட்டாமல்
நான் பார்க்கும் போது
வளைந்து,நெளிந்து போகிறாய்
அந்த வளைதலிலும்,நெளிதலிலும்
எத்தனை அழகு இருக்கிறது
அது உனக்குத் தெரியுமா........

நீ
அழகாய் வரும் போது
இவள் மனைவியாகக் கூடாதா.?என்பது பலரின் பிரார்த்தனை
அழகுருவமெடுத்து
பல இதயங்களை கவர
உன்னால் எப்படி முடிகிறது........

நீ
உதடு விரித்து
புன்னகைக்கிறாய்
நான் உன்னில்
சரிந்து விழுகிறேன்..
நீ
கவிதையை
அதிகம் ரசிக்கிறாய்
உன்னை ரசிப்போர்
அதிகம் பேர் நீ அறிவாயா...?

காதலன் கனவு வரை
கணவன் கல்லரை வரை
இது
நீ அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை
எப்படி உன்னால் இந்த தத்துவத்தை
கற்பனை பண்ண முடிந்தது....
ஆக!நீ கற்பனையின் நாயகியா....?


கணவனுக்கு அன்பான மனைவியாய்
பிள்ளைகளுக்கு பாசமுள்ள தாயாய்
உறவுகளுக்கு நல்ல தோழியாய்
எப்போதும் நீ இருப்பாய்..
அது உன் ஒவ்வொரு அசைவிலும்
எனக்குத் தெரிகிறது.........


இப்படியெல்லாம்
இருக்கும் நீ கவிதையை படிக்கிறாய்..
நான் உன்னை படிக்கிறேன்.........

Wednesday, December 29, 2010

பின் தொடர்தல்..........


24.04.2001..திங்கட் கிழமை அன்று என் பிறந்த நாளும் கூட,கதிரவன் நடு உச்சியில் உட்கார்ந்து கொண்டு,தன் சுடர்களினால்  பூமியைப்பதம்பார்க்கிறது.உம்மாவின் மதிய நேர ருசியான சமையலை உண்டபின்.என் வீட்டுக்குப்பின்னால்.அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றங்கரையோரம் வந்து காற்று வாங்துவது என் வழக்கம்.(அங்கு அநேகமானோர்,அந்த ஆற்றங்கரையோரம்தான் தங்களது ஓய்வை கழிக்க வருவாங்க)அப்படியேதான் ஒரு நாள் நான் ஒய்வைக்கழித்துக் கொண்டிருக்கும் பொழுதில் என் மேனியில் கொட்டிக் கொண்டிருக்கும் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருக்கிறது என் ஊர் ஆற்றங்கரையோரக் காற்று.ஆற்றங்கரையோரம் நீண்டு,வளைந்து வளர்ந்திருக்கும் தென்னை மரத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி என்னுள் அலை மோதிக் கொண்டிருக்கும் அவளது நினைவுகளை மறந்து கொண்டிருக்கிறேன்.இயற்கையை ரசிக்கிறேன்.ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் மீன் குஞ்சுகள் கூட்டாய் கரையை மோதி மோதி விளையாடுகின்றன.புற் தரையில் மழலை
மொழி பேசும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.பசு மாடுகள் புற்களை மேய்ந்து கொண்ருக்கிறது.இப்படியாக மனதை ரம்மியப்படுத்தும் எழிலை ரசித்துக் கொண்டிருக்கும் போது.அக்கரையில் ஒரு அழகிய பெண் பனை மட்டையில் கிளி நடப்பதுபோல் நடந்து போகிறாள் அழகாய் மிக அழகாய்....எனக்குள் வதை செய்து கொண்டிருக்கும் அவளது நினைவுகளை  மறந்து கொண்டிருக்கும் போது அவள் மீண்டும் என் ஞாபகத்தில் வந்து  என்னை தொலைக்கிறாள்..அக்கரையில் நடந்து போகும் பெண் அவளாகயிருக்குமோ...கோடி அழகை தன்னுள் வைத்து எப்படியெல்லாம் என் மனதை திருடுகிறாய்..அவளை மறக்க  மந்திரங்கள் செய்த போதும்,தந்திரமாய் என்னுள் நுழைகிறாள்..
இக்கரையில் நானிருக்க........அக்கரையிலிருந்து எப்படியெல்லாம் என்னை கொள்கிறாய்......


உச்சி வெயில்
வியர்வை    
காற்று
ஆற்றங் கரை
தென்னை மரம்
இயற்கையின் அழகு

...இவையெல்லாம் மறந்து போக...உன் நினைவுகளுடன் மாத்திரம் வழமை போல் வீடேகினேன்.......

Tuesday, December 28, 2010

எங்களைக் காத்த கடல் ..............

எங்களைக் காத்த கடல்
வேறோடு பிடுங்கியெறிந்த மாயமென்ன..
எங்கள் சொத்துக்களை,
சுருட்டிப்போன வேகமென்ன....
எப்போதும் கடலை நம்பிய உறவுகள்
சுனாமி வந்து உயிர்களை பிடுங்குமென்று நம்பியதுண்டா........

மரணங்களைக் கொண்டு வந்த
சுனாமியே..உன்னை மறப்பது எப்படி..

தூங்கும்போதும்,விழிக்கும் போதும்
என் உம்மா கண் முன்னே மகனே என்கிறாள்
வாப்பாவிடம் காசு கேட்கிறேன் மிட்டாய் வாங்க
தம்பி எனக்குத் தெரியாமல் என் சேட்டைப் போட்டுப் போகிறான்
தங்கச்சி வந்து நானா  கடைக்குப் போனாள் சொக்லெட் வாங்கித்தாங்கவென்று
அடம் பிடிக்கிறாள்..பக்கத்து வீட்டுக்கார நண்பன்
விளையாடுவதற்காய்
கிரிக்கெட் மட்டேயோடு நிற்கிறான்
என் வீட்டு வாசற் படியோரம்..................
காதலி இரவில் வந்து தூக்கம் தொலைக்கிறாள்
இப்படி பல நினைவுகள் மாத்திரம்தான் மீதமிருக்கிறது
இவர்கள் மீளாப் பயணத்தில்,சுனாமியின் அரவனைப்பில்
மண்ணுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்...........


அதிர்வுகளை ஏற்படுத்தி
உள்ளங்களை அதிர வைத்தாய்
அஞ்சாத மனிதர்களை அச்சம் கொள்ள வைத்தாய்
நீ ஊருக்குள் வந்து அதிசயங்கள் பல நிகழ்த்தினாய்........

கஞ்சிக்கும் வழியின்றி
கஷ்டப்பட்ட மனிதர்களை
எட்டியும் பார்க்காத பணக்காரர்கள்
ஏழை வீட்டில் அடைக்கலமானதும் அன்றுதான்
சுனாமி பொதுவானது அதனாலதான் பாகுபாடின்றி தாக்கியது...........


மனிதன்.....மனிதனை வேட்டையாடும்
இப் பூமியில்,
இயற்கையின் கோபம் எத்தனை கொடூரமானது
ஆக!சுனாமி நமக்கு பாடம் கற்றுத் தந்திருக்கின்றதல்லவா..?

ஒரு உயிரின் இழப்புக்கே
தலையில் அடித்தழும்
நம் தாய்மார்கள்
இலட்சக்கணக்கான பிள்ளைகளை
சுனாமியிடம் பறி கொடுத்து
எப்படி அழுதிருப்பார்கள்..........

முத்தமிட்டு முத்தமிட்டு
பழகிய பல உறவுகள்
மூக்கைப் பொத்திக் கொண்டு
உறவுகளின் உடல்களைத் தேடியதும் சுனாமியன்றுதானே.....

கடற்கரையில் மீன்களைத்தான் அள்ளியெடுத்தோம்
சுனாமி மனிதப் பிணங்களையல்லவா..அள்ளியெடுக்கவைத்தது........



ஆறாத வடுக்களைத் தந்து
அடக்கமாய் அலையடித்துக் கொண்டிருக்கும் கடலே
இனியும்...ஊருக்குள் வருவாயோ....
வந்து விடாதே.....
நீ வந்தால் யார்தான் இங்கு மீதமிருப்பார்கள்........


Monday, December 27, 2010

வசந்த நிலா.......இது உணர்வுகளின் பகிர்வு......................


மெல்லவும் முடியாமல்,துப்பவும் முடியாமலும்,வதை செய்து கொண்டிருப்பதுதான் ஒரு தலைக்காதல்.இப்பேடியதான் காதலை தன் மனதுக்குள் வைத்திருக்கிறார்கள்.சியாத்தும்..,சியாமாவும்..இரண்டு பேரும் பல வருடங்களாக பழகி வருகின்றார்கள்.இவர்களுக்குள் ஏற்படுகின்ற சந்தோஷங்களையும்,சோகங்களையும்,மனமிட்டு பரிமாறிக் கொள்ளுமளவுக்கு இவர்களது உறவு நீடிக்கிறது.இப்படியாக பழகுதல் தொடர காலங்கள் உருண்டோடுகின்றது.ஒவ்வொரு நாளும் நகர நகர கருவில் இருக்கும் சிசு வளர்வதைப் போல்,இவர்களுக்குள் துளிர்விட்ட ஒருதலைக்காதலும் வளர்கிறது.நட்பு ரீதியாக எவ்வளவோ பேசியிருக்கிறோம்.இரண்டு பேரும் பேசிப் பிரிகின்ற பொழுதுகளில் கண்களில் ஆயிரம் காதல் தெரியும்,ஆனால் அந்த காதலை வெளிப்படுத்த முடியவில்லை.
காதலை யார் முதலில் சொல்வது என்பதில் இருவருக்குமிடையில் ஒரு போராட்டம்.நாளாந்தம் உணர்வுகளை மௌனமாக்கிப்போகும்.இந்த இரண்டு இதயங்களையும் பார்த்து நான் இப்படிச் சொன்னேன்.......



உன் அழகிய திருமுகத்தைக் காண ஏங்குகிறேன்...
ஆசையோடு உன் வரவுக்காய் காத்திருக்கிறேன்.......
இமை கூட மூடாமல் விழித்திருக்கிறேன்.........
ஈவிரக்கம் காட்டமாட்டாயா....?
ஊஞ்சலாடும் மனதை அடக்க முடியாத நான்..,
என் மனதையே புரிந்து கொள்ள முடியாத நான்...,
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் உன் பதிலுக்காக...............

(வசந்த நிலா நிகழ்ச்சியில் நேயர்களின் கவிதைக்காய் ஒலிபரப்பான பிரதி...15.07.2010)

இது வாழ்க்கைப் பயணத்தின் துயரமான......26.07.2010....


வறுமை சில குடும்பங்களை தொடர்ச்சியாக வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும்,இப்படியான வறுமைக்குள் அகப்பட்டுக்கொள்ளும் சிலர்,வறுமையிலிருந்து விடுபட வெளிநாடுகளுக்கு வேலை தேடிச்செல்வதுமுண்டு.இப்படியேதான்,அக்கரைப்பற்றில் இருக்கும் ஆஷிக்,குடும்பத்தில்,வறுமை தலைவிரித்தாடியதால்,பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு,உறவுகளிடம் கடன் பட்டுக்கொண்டு கட்டார் நாட்டுக்கு தொழில்தேடி,கடல்தாண்டி புறப்பட்டான்,குடிசைக்குள் கண்ணீரோடு நாட்களை நகர்த்திய அவனது தாய்,இனியென்ன! மகன் ஆஷிக் வெளிநாடு போய்விட்டான்.பக்கத்து வீட்டுக்காரர்களைப்போல் சந்தோஷமாக வாழலாம்.என பெருமூச்சு விட்டாள்,மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதிப்பது போல்,ஆஷிக்குக்கு விதி கட்டாரிலும் விளையாடுகிறது.நல்ல வேலை கிடைக்குமென்றுதான் வெளிநாட்டுக்குப் போனான்.ஆனால் அவனுக்கு கிடைத்ததோ,அவனது சக்திற்கு அப்பாற்பட்ட வேலை,அதாவது பாலை வனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை.என்ன செய்யலாம்,நாட்டுக்கு திரும்பி போக முடியாது.வீட்டில் வறுமை தலை விரித்தாடுகிறது.கடன் பட்டு வேறு வந்திருக்கிறோம்.விதி இதுதானென்று வேலை செய்தான்.அவ்வாறு பாலை வனத்தில் ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்த அவனுக்கு,தனது எஜமானால்,நேரத்திற்கு சம்பளம் கிடைப்பதுமில்லை,ஒழுங்காக சாப்பாடு கொடுப்பதுமில்லை,தனது உடலை வருத்தி  வேலை செய்த ஆஷிக்,காலப் போக்கில்,மெலிந்து,காய்ந்து,சுட்டெரிக்கும் அந்த பாலை வனத்தில் தினம்..தினம் கண்ணீரோடு காலம் கழிக்கின்றான்.........


(வசந்த நிலாவில் நேயர்களின் கவிதைக்காய் ஒலிபரப்பான பிரதி)

Monday, December 20, 2010

ஞாபகித்தல்...........

நேற்றிரவு
கனவில் வந்தாய்
செல்லத்தனமாய் சினுங்கினாய்
உதடு விரித்து புன்னகைத்தாய்
என் கோபங்களை தணிக்க
என் தலையில் குட்டினாய்
நல்ல காலம்..நீ கனவில் குட்டியதால்,
என் தலை வலிக்கவில்லை..........

உன் பெயரை
என் கவிதையில் எழுதுமாறு
கெஞ்சிக் கேட்டாய்...
அன்பே.. உன் பெயர்
அழகான ஹைக்கூ கவிதை..
விமர்சிக்கப்படும் என் கவிதையில்
உன் பெயரை நான் எழுத
என் கவிதை இன்னுமொருவரால்,
விமர்சிக்கப்படும் பொழுதில்
நீயும் விமர்சிக்கப்படுவாயில்லையா...?
ஆக!என்னால் வாசிக்கப்படும்
அழகான கவிதையாய்
எப்போதும் என்னுள் நீ இருப்பாய்....

உன்னோடு முரண்பட்ட பொழுதுகளில்
எனக்காய் நீ எத்தனை முறை அடக்கி வாசித்திருக்கிறாய்
உனக்காய் பலபேர்
உன் வாசற்படியோரம் தவமிருக்கையில்
எனக்காய் நீ சுவாசிப்பாய்
பல பேரால் இவன் வெறுக்கப்படுகையில்
நீ மட்டும் நேசிக்கிறாய்...
அன்பே..உன்  காதலை;
என் மனசுக்குள் வைத்திருக்கிறேன்.........

எப்போதும் நீ விசாரிப்பாய்
எப்போதாவது நான் விசாரிப்பேன்
பாதை மறந்த போதிலும்
பாசம் காட்டத் தவறியதில்லை
நேற்றிரவு கனவில் ஞாபகப்படுத்தினாய்
நமது பழைய கதையை...........


நேற்றிரவு
கனவில் வந்தாய்
டயரியைப் புரட்டி,
ஒவ்வொன்றாய் ஞாபகப்படுத்தினாய்
செல்லத்தனமாய் சினுங்கினாய்
என் தலையில் குட்டினாய்
நல்ல காலம்..,கனவில் நீ குட்டியதால்
என் தலை வலிக்கவில்லை....................

கழித்தல்...........

நேற்று,
என்னால் காதலிக்கப்பட்டது
இன்று வெறுக்கப்படுகிறது.

உன்னிடமிருந்து
ஒரு நேர்த்தியான கவிதைக்காய்,
தவமிருந்தேன்,
என் நேர்ச்சை பலிக்கக்கூடாது
என பின்னர் பிரார்த்தித்தேன்.

ஒரு பகற் பொழுதில்,
உன் தெருவால் நீ நடந்து போகின்ற போது
எத்தனை அழகு தேவதைகள்
உனக்காய் நடனமாடுகின்றன
உன்  அழகை வேட்டையாட
பல கழுகுகள் வட்டமிட்டன
அந்த கோர முகத்தோடு வந்த
கழுகுகளிடமிருந்து  உன்னை பாதுகாத்தது
ஞாபகமிருக்கிறதா..?
தன் நித்திரையை
ஒத்தி வைத்துவிட்டு
காவல்காக்கும் வயற்காரனைப் போல்
உன்னை யாராவது திருடிவிடக்கூடாது என்பதற்காய்
இரவு முழுவதும்
என்னை உனக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பேன்
காவல் காத்ததால்
நல்ல அறுவடை கிடைத்தது வயற்காரனுக்கு
ஆனால்,எனக்கோ கண்ணீர் கிடைத்தது..
இப்போது தூக்கம் தொலைத்த இரவுகள்
எனக்குள் வெட்கித்து தலை குனிகிறது....

பேசிப் பேசி...
வார்த்தைகள் பஞ்சமாகிப் போக
நமது உரையாடல்கள்
நின்று விடக்கூடாது என்பதற்காய்,
ஏதோ ஏதோவெல்லாம் உளரித்தள்ளியது
ஞாபகமிருக்கிறதா..?பின் செல்லத்தனமாய்
போபித்துக் கொண்டதை மறந்துவிட்டாயா..?

ஒவ்வொன்றாய்,
ரசித்து ருசித்து
எழுதிய கவிதையை
மீண்டும் மீண்டும்
வாசிப்பதைப்போல்,
எழுத்து பிழையோடு வரும்
உன் கடிதத்தை திருத்தி,திருத்தி வாசிப்பேன்
உன் எழுத்துப் பிழையைப்போல்
உன் ஞாபகம் எனக்குள் வதை செய்கிறது.......

இன்றிரவு
என் பெட்டியை சரி செய்கின்றபோது
நேற்று நான் பத்திரப்படுத்திய
சில குறிப்புக்களை கிழித்து வீசியதைப் போல்
உன் ஞாபகங்களையும்
அகற்ற வேண்டும்..அவசரமாய்..மிக அவசரமாய்....
நேற்று விரும்பப்பட்ட நீ
இன்று வெறுக்கப்படுகிறாய்.
வெறுக்கப் படும்பொழுது
என் மனசு வெறுமையாகிறது
என்ன செய்வது,
ஒரு சிக்கிரட்டின்
புகையை வெளியே தள்ளுவதைப்போல்
உன்னையையும் மறக்கவேண்டியிருக்கிறது......

Sunday, December 19, 2010

மனித வாழ்க்கை எத்தனையோ சம்பவங்களால் பிண்ணப்பட்டிருக்கிறது..........


இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில்,பிறந்து,வளர்ந்து பட்டாம் பூச்சியாய் சிறகடித்து பறந்த சுமையா திருமணத்திற்கு பிறகு தன் கணவரோடு தலை நகரில் வாழ்கிறாள்.இவர்களின் வாழ்க்கையின் ஆரம்பம் மகிழ்ச்சி நிறைந்ததாக காணப்பட்டது.எந்தவித குறையுமின்றி, கண்காணித்து வந்தான் சுமையாவின் கணவன் றமீஸ்.தலைநகரின் பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில்,காலப்போக்கில் றமீஸ் வியாபாரம்,பணம் என்று வாழத் தொடங்கினான்.இப்படியாக தன் நேரங்களை செலவழிக்கத் தொடங்கிய றமீஸின் இதயத்தில் நிறைந்திருந்த மனைவி சுமையா  கொஞ்சம் கொஞ்சமாக தூரப்போகிறாள்.பணம்,பணம்.என்று ஓடத்தொடங்கியதால், றமீஸ் நேரத்திற்கு வீட்டுக்கு வருவதுமில்லை,முன்னரைப் போல் மனைவி சுமையா மீது அவன் அன்பு காட்டுவதுமில்லை.இதனால் இருவருக்குமிடையில்,முரண்பாடுகள் அடிக்கடி எழத் தொடங்கின.அன்பு வார்த்தைகளை மட்டும் ஆரம்பத்தில் பேசி மகிழ்ந்த இந்த தம்பதிக்ள் பின்னர் வம்பு வார்த்தைகளையும் பிரயோகிக்கலாயினர்.
உறவுகளையும்,தான் வாழ்ந்த ஊரையும் விட்டு,கணவனோடு வாழ வந்த அவளுக்கு,கணவரின் இந்தப்போக்கால், வாழ்க்கையே வெறுத்துப்போனது.தனிமையும்,கணவரின் முரண்பாடும் சுமையாவை சோகம் குடி கொண்டது.இப்படியே பெருமூச்சுவிட்டு நிமிடங்களை நகர்த்திக் கொண்டிருக்கும் அவள்.வாழ்க்கையின் பயணத்தோடு கை கோர்த்த கணவனை விட்டு பிரியமுடியாமலும்,வாழவும் முடியாமலும்.,வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்களையும்,மனக்கவலையோடு கழித்துக் கொண்டிருக்கிறாள் .
 
.........இப்படி எத்தனையோ பெண்கள் மனசுக்குள் தங்களது சோகங்களை புதைத்து புதைத்து வாழ்கின்றனர்.இவர்களின் மன எண்ணங்களை வெளிக்கொணர,நேயர்களின் கவிதைக்காய் வசந்த நிலாவில்,நான் ஒலிபரப்பிய பிரதி.....................

Thursday, December 16, 2010

திங்கள் வசந்த நிலா.....2010.08.30....

மீனவக் குடும்பத்தில் பிறந்த சப்னாவின் கணவரும் மீன் பிடித் தொழிலாளி,அவளது கணவரான ஷாக்கீர்,கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கம்.ஒரு நாள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்,விடிந்தும்,திரும்பி வரவேயில்லை.மழையோடு வீசிய புயல் அவரை எங்காவது கொண்டு போயிருக்குமோ..?அல்லது கடலுக்குள்தான் அமிழ்த்தியிருக்குமோ..?இப்படியாக பல எண்ணங்கள் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது அவளது மனசை,அவள் தேடியும் அவர் கிடைக்கவில்லை.என்னாச்சோ இன்னும் தெரியவில்லை.நாளாந்த வருமானத்தோடு வாழ்க்கையை நகர்த்திய சப்னா பின்னர்,விதவையாகிறாள்.சப்னாவுக்கு கைக் குழந்தையொன்றும் இருக்கிறது.வறுமை அவளையும் தொற்றிக் கொள்கிறது.என்ன செய்வது வறுமையின் ஆற்றாமையினால்,ஊரில் வசதி படைத்தவர்களின் முகத்தை சோர்ந்த மனசோடு பார்ப்பாள் சப்னா,ஆனால் அவர்களோ!அவளது சோர்ந்து கிடக்கின்ற முந்தானையத்தான் பார்ப்பார்கள்.அநாதரவற்ற அவளை சில கழுகுகள் வேட்டையாட சுற்றித்திரிவதால்,அவள் தனது குடும்ப நிலமையை மற்றவர்களிடம் சொல்ல பயப்படுகிறாள்.


இந்த நிலமையில் இருக்கும் பெண்ணுக்கு பொருத்தமான உங்கள் கவிதை எப்படி..?நேயர்களின் கவிதைக்காய் வசந்த நிலாவில்,ஒலிபரப்பான பிரதி.........

வாழ்க்கைப் பயணம்...2010.08.23...


மென்மையான மழைத் துளியோடு வீசிய காற்று,என் உடலைக் குளிர்மைப்படுத்திக் கொண்டிருந்தது.ஒரு காலைப் பொழுதில்,நண்பர் கமாலின் வீட்டை பல வருடங்களுக்குப் பிறகு தேடிப் போயிருந்தேன்.மாத்தளை மாவட்டத்தின் வரக்காமுறை எனும் இடத்தில் அவரின் வீடு அமைந்துள்ளது(மாத்தளை என்று குறிப்பிடுகின்ற பொழுது ஒருவர் ஞாபகத்திற்கு வருகிறார்,வேறு யாருமில்லை நண்பர் அபாஸ்முஹம்மட்,அறிவிப்பாளராக நுழைந்து இப்போது வசந்தம் வானொலியின் செய்திகளுக்கு பொறுப்பாகயிருக்கின்றார்,இனிய நண்பர் மனதில் பட்டதை சட்டென சொல்லக்கூடியவர் இவரைப் பற்றி தனியான பதிவில் சொல்வேன். சரி நம்ம விடயத்திற்கு வருவோம்.உயர்ந்த மரங்களும்,மலைமுகடுகளும் நிறைந்த பாதையைக் கடந்து அவரது வீட்டை ஒருவாரு கண்டுபிடித்தேன்.நண்பர் கமாலின் வீட்டைப்பார்த்ததும் சோகம் நிறைந்த அதிர்ச்சி எனக்குள்,ஒரு காலத்தில் வானொலி,தொலைக்காட்சியில் தனக்காக தனியிடம் பிடித்து கலக்கியவர்,ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்துக்கொண்டவர்,நல்லாயிருந்தவர்தானே இவருக்கா இந்த நிலை கமாலின் வீட்டுச் சூழலைக் கண்டு அதிர்ந்து போனேன்.
ஒருவாராக என்னை சுதாகரித்துக் கொண்டு அவர் வீட்டின் கதவைத் தட்டி கமால் இருக்கிறாரா என்று கேட்டேன்.அவர்தான் கதவைத்திறந்தார்.கதவைத்திறந்த கமால் என்னைப்பார்த்தர்.இது கமால்தானா என என்னை ஒரு கணம் எண்ணவைத்தது.அவரது வீடு கட்டிய குறையில் பூசப்படாமல்,மழையில் நனைந்து ஆங்காங்கே செங்கல் கரைந்து போயிருக்கிறது.அவரும்,அவரது வீட்டுச்சூழலும் நண்பர் கமாலின் சோகங்களையும்,அவலங்களையும் கட்டியம்கூறி நிற்கிறது.என்னை அன்னார்ந்து பார்த்து உள்ளே வாங்க என்றார்.உள்ளே நுழைய 
ஒரு அடி எடுத்து வைத்தேன்.என் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.நண்பா உனக்கா இந்த நிலை.பெயரோடும்,புகழோடும் உலா வந்த கமாலா.....வீட்டுக்குள் உறைந்து போயிருப்பது.நண்பரை ஆறத்தழுவி விசாரித்த பின் அங்கிருந்து கண்ணீரோடு விடை பெற்றேன்.

உலகம் ஒரு வாடகை வீடு இங்கு வந்தவர் பலர்,தங்கினவர் யாருண்டு,அதற்குள் நம்மவர்கள் அவரவர் பற்றிப் பேசி பெருமை தேடுவதில் காலத்தை வீணடிக்கின்றனர்........


Tuesday, December 14, 2010

காற்றலையில் உங்களோடு......


உன் வார்த்தைகளின்
இடை வெளிகளில்
மறைந்து கொள்கிறது
என் மௌனம்.....


*******************

கோபத்தில்,
என்னை ஆசுவாசப் படுத்த
உன்னால் எப்படி முடிகிறது
இந்த வித்தைளை எங்கே கற்றுக் கொண்டாய்.......
*******************

சேர்வோம்
என்ற நம்பிக்கையில் பிரிந்தோம்
இருப்பினும்,நிரந்தரமாய் பிரிந்தோம்
நினைவுகள் மட்டும் மீதமிருக்க...
*******************

உன்னோடுயிருந்த
நாட்களை மறப்பது எப்படி..
கடிகாரம் பார்க்கும் போதெல்லாம்
உன்னையும், நீ விட்டுச் சென்ற என்னையும்
ஞாபகப்படுத்துகிறது......
**************************

பார்த்து,பார்த்து......
நெஞ்சில் புதைந்த உன் முகம்
பார்த்து,பார்த்து
வளர்ந்த நம் காதல்
வெறும்,பார்வையாலே
பிரிந்து போனது.............
***********************
ஆயிரம்,
சேதிகள் சொல்ல
உன்னருகே வருவேன்
நீ பார்க்கும் பார்வையால்
ஊமையாகிவிடுவேன்.........

உனக்கான
என் கவிதையால்
என் டயரியின் பக்கங்கள் நிரம்புகின்றன
ஆனால்,
உன்னைப் போல்
அழகான கவிதை  ஒன்றுமேயில்லை.......
****************************

நீ
தூரமாகின்ற போது
நிலா முற்றத்தில்
ஒரு கவிதை செய்து பாடுவேன்
உன் ஞாபகங்களை........
*************************

காதலுக்கு
கண்கள் இல்லையென்பது
மிகைப்படுத்தப் பட்ட பொய்தானே..
இல்லையென்றால்
காதலின் வலியால் வரும்
கண்ணீர் எங்கிருந்து வருகிறது......
*****************************

மழையைக் கண்டு
மகிழும் பயிரைப் போல்
உன் புன்னகையைக் கண்டு
ஆயிரம் பூக்களை பூக்கிறது
என் இதயம்.........
********************

நான்
நினைப்பதெல்லாம்
நீ தூக்கத்தில் பேசுகிறாய்
ஆமடி,
நமக்குள் காதல் வராமல்
வேறென்ன.........
*******************

உன் முகத்திரை நீக்கி
ஓரக் கண்ணால்
இமை வெட்டிப் பார்த்தவளே
என் இதயத்தை வருடி விட்டுப் போறவளே
உனக்கும்,எனக்கும்
புரியாத பிரியம் வர
என்ன காரணம்..........
******************

பூப் பெய்திய
என் கனவுகளை
கசக்கி விட்டுப் போகும்
கண் மணி
என் உயிரையே பிடுங்கி விட்டுப் போகிறாய்...........
******************

மௌனம்
கற்றுத் தராத
உணர்வுகளையா.?
நமது
வார்த்தைகள் சொல்லப் போகிறது....
 ****************
     
      
ஏ.எம்.அஸ்கர்..

Monday, December 13, 2010

இழத்தல்.........

ஏதோவொன்றை
இழந்துவிட்டதாக
ஒவ்வொரு இரவும்
விடிந்து போகிறது....

கனவுகளில்
இழந்தவைகள் அதிகம்
அது..
விழித்ததும் பொய்யாகிப் போகும்
ஆனால்,
நிஜத்தில் இழந்தவைகள்
இன்னும் மனதை உலுக்குகிறது
காலங் கடத்தும்....

இழந்தவைகள் பல
சில இழப்புக்கள்
வலிகளைத் தந்து
பின்னர் மறைந்து போகும்...
இன்னும் சில இழப்புக்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
சாகடித்துக் கொண்டிருக்கும்
தீராத நோயைப் போல்....
இழப்புக்களின்றி வாழ்வேது....?

காதலின் இழப்பு
திருமணத்தின் பின் மறந்து போகும்
பின்னர் சுகமான வலிகளைத் தரும்..
அது மனசுக்குள்ளேயே அடங்கிப் போகும்...
தெருவெல்லாம்
சுற்றித் திரிந்த
நண்பர்களின் இழப்புக்கள்
தரும் வலி...அது சோக வலி
உறவுகளின்
இழப்புக்கள் தரும் வலி
அது  மீளாத
துயர் நிறைந்த வலி....

ஆனால்..,
மூன்றையும்
இழந்து தவிக்கும் வலியை
என்ன வலியென்பது தோழா...?

நிஜத்தில் நடந்த
சில இழப்புக்கள்
கனவாகிப் போகக் கூடாதா...?
இப்படி ஏங்கி
பின்.,ஏமாறுவதுமுண்டு
ஏமாற்றமும் ஒரு இழத்தல்தானே......

இழப்புக்களின்
அவலத்தை சுமந்து
அல்லலுறும் என் மனசை
ஆறுதல் படுத்தும்
சில உறவுகள்....
ஒவ்வொரு நிமிடமும்
கடந்து போகும்
ஆறாத சுமைகள் நிறைந்ததாக........

சில கணங்களில்
இழப்புக்களில்
இன்னுமொரு இழத்தலாக
நானிருக்கக் கூடாதா.....
இப்படி சிந்தித்து..
பின் சிந்தனையை நொந்ததுமுண்டு......

எப்படியிருந்த போதிலும்.
இப்போதெல்லாம்
ஏதோவொன்றை
இழந்ததாய்
ஒவ்வொரு இரவும்
விடிந்து போகிறது............
        
ஏ.எம்.அஸ்கர்....

விலாசமில்லாத திசை...........

விழித்து பார்க்கிறேன்
வழி நெடுகிலும் புது முகங்கள்
விலாசமிட்டிருக்கின்றன......

துப்பாக்கி ஏந்திய
ஒரு ஏகாதிபத்தியம்
மூலை முடுக்கெல்லாம்
முகாமிட்டிருக்கின்றன.....

நேற்று வரை
நான் உருண்டு புரண்டு விளையாடிய
என் ஊருக்கா இந்த கெதி.......

ஆறத் தழுவிய உறவுகள்
ஓய்வின்றி சேர்த்த சொத்துக்கள்
எல்லாமே அந்நியமாகிவிட்டன......

இப்போதிங்கு..,
எல்லோருமே புது முகங்கள்...
ஏப்பமிட்டுத் திரிகின்றன
எங்களது பூர்வீக பூமியென்று......

என்ன செய்வது
யாருடையதோ பசிக்காக
எனது கிராமமும் பலியாகிறதே........
துப்பாக்கி முனைகளில் வெளியேறுகின்ற.,
துர்ப்பாக்கியத்தில்...,
திசை தெரியாது நிற்கிறோம்............

ஏ.எம்.அஸ்கர்

(2006 ஜனவரி மாத எழுவான் பத்திரிகையிலும் பார்க்கலாம்)

Friday, December 10, 2010

வசந்த நிலா.....


தரிசனத்திற்காய் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தால்,ஒரு இளம் பெண்,போய்க்கொண்டிருந்த வழியில் பூக்கள் நிறைந்த மரத்தை காண்கிறாள்.அந்த மரத்தில் ஏராளமான பூக்கள் காணப்படுகின்றன.அவளது கண்களை கவர்ந்த அத்தனை பூக்களையும் பறித்துக் கொள்கிறாள்.ஆனால்,மரத்தின் உச்சியில் அழகாய் ஒரு பூ பூத்திருக்கிறது.அவள் அந்தப் பூவையும் பறிப்பதற்காய் எட்டி,எட்டி எத்தனிக்கிறாள்.அவளால் முடியவேயில்லை.எல்லாப் பூவையும் பறித்தவள் அந்தப் பூவை மட்டும் விட்டு விட்டு போகிறாள்.மரத்தின் உச்சியில் பறிக்க முடியாமல் தனிமையாகயிருக்கும் அந்தப் பூ அவளைப்பார்த்து என்ன சொல்லியிருக்கும்...........................

................இது 25.10.2010 திங்கள் வசந்த நிலாவில் நேயர்களின் கவிதைகாய் நான் சொன்ன சம்பவம்..............

காதலன், காதலியை நோக்கி அனுப்பும் விண்ணப்பம்...........


எனக்கு அவளைப்பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது.அவளது அழகுக்கும்,அவளது குணத்துக்கும் அவளே நிகர்.அவள் என் வாழ்க்கையின் துணைவியாக வேண்டுமென்று பிரார்த்தனைகள் எனக்குள் பல,காலங்களை தாமதப்படுத்தாமல் காதலியை விரைவாக கரம் பிடித்து அன்பாக வாழவேண்டும் என்று என் இதயம் துடிக்கிறது.ஆனால்,அவள் காத்திருக்கச்சொல்கிறாள்,எனக்கு பயமாகயிருக்கிறது.சில நேரம் அவள் கிடைக்காவிட்டால் நான் எப்படி வாழ்வேன்.ஆதலால்.அவளைப்பார்த்து நான் சொன்னேன்.....

அன்பே என் வாழ்க்கையின் கனவுகள்
கரைந்து போகுமென்று பயமாயிருக்கிறது,
நீ வாந்தால் நான் வாழ்வேன்
நீ போனால் நான் இறப்பேன்............

இது 13.09.2010 திங்கள் வசந்த நிலாவில்,நேயர்களின் கவிதைக்காக என்னால் ஒலிபரப்பப்பட்ட சம்பவம்.....
.......இது வாழ்க்கையின் பயணம்...........

Thursday, December 9, 2010

காற்றலையில் உங்களோடு..............

மனங்கள் மௌனமாக பேசிக் கொள்ளும் இரவுகளில்,உங்கள் இதயங்களோடு பேசிக் கொண்ட என் கவிதைகள்.......................




நிமிடங்கள் நகர மறுத்தாலும்
உன் பேரை உதடுகள் உச்சரிக்கத் தவறுவதில்லை
இப்படியிருந்தும்..,
நமது தரிசனத்தை...,ஏன் தரித்திரமாக்குகிறாய்..
******************************


ஒவ்வொரு இரவிலும்
இசைத் தட்டுக்களுக்குள்
கலந்து போகும்
என் உயிரின்.....உயிர் நீ.........
****************************

தினம் தினம்
எத்தனை பிரார்த்தனைகள் உனக்காய்
எப்படி இருக்கிறாய்
அஞ்சலிடு உன் நலத்தை.........
********************************


அழைத்து அழைத்து
இந்த நெஞ்சம் வலிக்குது
வலிகளுக்கு நிவாரணமாய்
எப்போது வருவாய்......
*********************************

இரவுகளை
கனவுகளால்
அழகு படுத்தும்.....அழகு தேவதை நீ..........
*************************************

நீ
தூரமான போது
இதயத்தின் துடிப்பு இரட்டிப்பாகிறது
இரவுகளில் சில பாடல்கள்
என்னை ஆசுவாசப் படுத்துகிறது.....
************************************

குறைகளோடு பிறக்கும்
என் கவிதைகள்
உன் முகவரியைத் தேடி
பயணிக்கின்றன ஒரு வழிப் போக்கனாய்......
*************************************

உன் வரவுக்காய்
முகவரி தேடுகிறேன்
தபால் காரனாய்
மறைத்து வைத்திருக்கிறாய் உன் முகவரியை....
*************************************

சின்னக் குயிலே
உன் சின்னப் பெயர்
என்ன அழகாயிருக்கிறது
*********************************

கூடி வந்த வேளை
கலைந்து போன காதல்
தூர நின்று
கெக்கலித்துச் சிரிக்கிறது....
*****************************

முகம் பார்த்து
கதை பேசி மகிழ
காதல் தேவதை எப்போது வருவாள்........
**********************************
என் கவிதைகளில்
உன்னை வைத்தேன்
உன் விழிகளில்
என்னை வைத்தாய்....
**************************

கையசைத்து
தூர விலகிப் போன புள்ளி மானே
என் காதில் சங்கீதம் பாட
எப்போது வருவாய்
****************************

வாரறுந்த பாதணியைப் போல்
வீசப்பட்டுக்கிடக்கிறது
தெருவோரம்...சிலரது வாழ்க்கை.....
*****************************

இல்லாதோரின் வார்த்தைக்கு
எங்குதான் கேள்வியுண்டு
காதலிலும் அப்படித்தான்....
****************************

மனதில் எழுந்த
மயக்கங்கள் மறந்து போகும்
நினைவில் தவழ்ந்த
நிகழ்வுகள் மறைந்து போகும்
கனவில் கண்ட காட்சிகள் கலைந்து போகும்
உயிரில் கலந்த உறவு மட்டும்
எங்கு கோகும்.............

Tuesday, December 7, 2010

இழப்புக்களின் வலி.........

என்னை நினைத்து....நீ..
கண்ணீர் விடுவது..
எனக்குத் தெரியும்....அது...
ஏக்கப் பெருமூச்சுடன் என்னை தாக்குகிறது........

நமது பிரிவுகளின்
ஆயிரம் சோகங்களை...நீ..
அழுகையால் தேற்றிக் கொள்கிறாய்..
உன் எண்ணங்கள்...... என்னை அதிர வைத்து..
ஆயிரம் துயரம் சொன்னது...........


நானும்.....நீயும்.....
நடந்து சென்ற உன் தெருவில்..
என் பாதச்சுவடுகளை தேடுகிறாய்..
பின்னர்..,ஏமாந்து போகிறாய்...

உனக்குச் சொந்தமென்றிருந்தால்.,
ஆயிரம் கவிதைகளை விதைத்திருப்பேன் உனக்கு...
என்ன செய்யலாம்...விதி.....
உன்னையும்..,என்னையும்..
பிரித்து வைத்திருக்கிறது.......


என்னையிழந்து..
தினம் நீ அழும் ஓசை.
என்னுள் எதிரொலிக்கிறது...பேரிடியாய்.........

பிரிவுகளை விரும்பியா...ஏற்றுக் கொள்கிறோம்..
ஏற்றுக் கொண்டுதான் பிரிந்து போகிறோமா....?..

என்னை நினைத்து
நீ கண்ணீர் விடும் சோகம்
என் ஒலித்தட்டுக்களில்..
சோகக் கீதமாய் ஒலிக்கிறது................

Monday, December 6, 2010

மறத்தலுக்கு பின்னரான நினைத்தல்..........

இன்றிரவு...
நினைக்கப் பட்டாய்..நீ
பழஞ்சோறைப் போல்.....

இப்போது பெய்யும்..மழையைப் போல்.
இம்சைகள் பல புரிந்தாய்..
ஏக்கம் தாங்காமல் தூக்கம் வந்தது..
தூக்கம் தாக்கமாயிப் போனது....அடி பாவி.....





நீ நினைக்கப்பட்ட போது..
நான் விலக்கப்பட்டேன் உன்னால்...
நான் விலகிய பிறகு...
உன்னால் நினைக்கப் படுகிறேன்......
மறத்தலுக்கு பின்னரான நினைத்தல்.... நியாயமற்றது.....

மறந்து நினைப்பது..
நினைத்து மறப்பது.....
வாடிக்கையாகிப் போனது உனக்கு...
அதனால் வேடிக்கையானது வாழ்க்கை உனக்கு.............

என்னை மறந்த போது...
பலரால் நினைக்கப் பட்டாய்...
பலரும் பிரிந்த போது...
என்னை நினைத்தாய்...
உன்னை ஏற்கச் சொன்னாய்..
மறத்தலும். நினைத்தலும் உனக்கு பழக்கமானது..
பின்னர் எப்படி ஏற்றுக் கொள்வேன்.........

இப்போது......
நான் பாதி....நீ பாதி என்பது வெறுஞ் சொல்லாடல....
நான் என்பது வேறு.....
நீ என்பது வேறு......

பலராலும் மறக்கப்பட்ட போது...
நீ என்னை நினைத்தாய்....
பாவம்...,
இன்றிரவு..,
நீ நினைக்கப் பட்டாய்...என்னால்..,
வீசிய பழஞ்சோறாய்................

Thursday, December 2, 2010

நேற்றைய நிழல்..........

நேற்று வீசிய காற்று
என் வீட்டு கூரையை
பிரித்துப் போனதைப் போல்
உனதான ஞாபகங்களும்
என்னிடமிருந்து பிரிகிறது........

உயிர்த்தெழும்
என் முற்றத்து மாமரத்தைப் போல்
நமது காதலும் வளர்க்கப் பட்டது
உன்னாலும்,என்னாலும்.......


மானமுள்ள காதலென்று
மனசு வைத்து மனுக் கொடுத்தோம்.
பின்னர்,.மானங்கெட்ட காதலென்று
நிராகரிக்கப் பட்டோம் அந்த மனசாலேயே......

 

பிரிவோம் என்றிருந்தால்..,
சந்திப்புக்களை தவிர்த்திருக்கலாம்..
இணைவோம் என்றுதான் சத்தியம் செய்தோம்..
பின்னர்.,ஒப்பந்தங்கள் கிழிக்கப் பட்டது எப்படி...?


அடை மழைக்குப் பின்னரான..,
அமைதியைப் போல்..
ஏதோவொன்றை நிகழ்த்திவிட்டுப் போய்யிருக்கிறாய்
என்னுள் நீ.....

 


இத்தனையும் நிகழ்ந்தது..
திகதி குறிக்கப்பட்ட..
உனது திருமண அழைப்பிதழ்
எனது முகவரிக்கு வந்த போது..............