Tuesday, November 30, 2010

ராகசங்கமம் இதயசங்கமம்......

கோடைக்குப் பினனரான மழையைக் கண்டு மகிழ்வதைப் போல்,நீண்ட இடவெளிக்குப் பிறகு முழுமையான இசை இரவை ரசித்த மகிழ்ச்சி எனக்குள்.இந்தியாவின் 'ராக சங்கமம்'இசையில் தென்னிந்திய திரைப்படப்பாடகர்களும்,பாடகிகளும்,நிகழ்ச்சியை அற்புதமான குரல் வளத்தால்.ரசிகர்களை அசத்தியமைதான் இத்தனை மகிழ்ச்சிக்குக் காரணம்.

28.11.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு 'ராக சங்கமம்'இசை கொட்டத் தொடங்கியது.வசந்தம் TV.வசந்தம் FM.வீரகேசரி பத்திரிகையின் ஊடக அனுசரனையில் மருதானை சென்.ஜோசப் உள்ளக அரங்கில் இது இடம் பெற்றது.

வெளியில் இயற்கை மழையில் நனைந்து கொண்டு இசை மழையில் நனைய வந்த மக்கள் கூட்டத்தால் அரங்கு நிரம்பி வழிந்தது.ஆக,ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்க தயாராகயிருந்தார்கள்,தென்னிந்திய பாடகர்களான,மனோ, மதுபாலகிருஷ்ணன்,எம்.எல்.ஆர்.கார்த்திகேயன்,பாடகிகளான,பிரியதர்சினி,பிரியாஹேமேஸ்,சுவி,இவர்களுடன்,கலக்கப்போவது புகழ்,விஜய் ரி.வி.யில் ஜோடி நம்பர்1 இலும் அசத்திய சிவகார்த்திகேயன்,ரோபோ சங்கர்...........இசை ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய தோமஸ், பென்.ட்ரம்ஸ் ஆகியோருடன் ஏனையோர்களும் இணைந்து இசை வழங்கினர்.

இனி யென்ன இசை மழைதான்....................

மனதோடு நிறைந்த மனோ நிகழ்ச்சியை ஆரம்பிக்க முதலாவதாக பாடிய பாடல் 'எங்க ஊர் பாட்டுக்காரன் திரைப்படத்தில் இடம் பெற்ற 'செண்பகமே செண்பகமே..சொல்லவா வேண்டும் அரங்கே அதிர்ந்தது கரகோஷத்தால்,அதற்கு பிறகு 'ஓ கிக்கு ஏறுது' 'வீரபாண்டி கோட்டையிலே' 'காட்டுக் குயிலின் மனசுக்குள்ள' சங்கீத ஜாதி முல்லை'இது போன்ற பாடல்களை பாடி ரசிகர்களை திருப்தி படுத்தினார்,

இள நெஞ்சங்களில் குடி கொண்டுள்ள  மதுபாலகிருஷ்ணன் முதலாவதாக பாடிய பாடல் நான் கடவுள் திரைப்படத்தில் இளைய ராஜாவின் இசையில் இடம்பெற்ற 'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்' இந்தப் பாடல் மூலமாக தன் குரல் வளத்தின் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் மது.இந்தப்பாடல்  இவருக்கு இந்தியாவின் 'மிர்ச்சி'விருதினை பெற்றுக் கொடுத்தது.அதனைத்தொடர்ந்து,கனா கண்டேனடி,கொஞ்ச நேரம்,தண்ணி தொட்டி தேடி வந்த,...போன்ற பாடல்களைபாடி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டார்.இருந்த போதிலும்,அவரது ரசிகர்கள் மது என அழைத்தும்,கை தட்டியும்,அவர் ரசிகர்களுக்கு எந்த வில்டப்பும் கொடுக்கவில்லை.(மது ரசிகர்கள் பாவம்)உருவத்தில் பெரிதான,வயதில் இளமையான எம்.எல்.ஆர்.கார்த்திகேயன் தனது அட்டகாசமான,துடிப்பான குரலால் ரசிகர்களையும்,அரங்கேயும் குசிப்படுத்தினார்.'ஓ சாந்தி' அரிமா, ஹோசானா,ஜே ஹோ,போன்ற பாடல்களை தனியாகவும்,ஜோடியாகவும் இணைந்து ஆடிப்பாடி ரசிகர்களை பரவசப்படுத்தியிருந்தார்.எந்த வந்தாவுமின்றி மக்களுக்குள்ளேயே வந்து ஆடிப்பாடியிருந்தார் நம்ம கார்த்திகேயன்.


பாடகி சுவியை அழைக்கின்றபோது தொகுப்பாளர்,இளைஞர்களுக்கு ரொம்பபிடிச்ச பாடகர் என அழைத்தார்.அப்போது நான் நினைத்தேன்.துள்ளல் பாடல்களை பாடக்கூடியவரென்று.மேடைக்கு வந்த பிறகுதான் புரிந்தது அந்த கண்ராவி சுவி குத்துப்பாட்டுக்களோடு சேர்த்து நம்ம மனசினையும் குத்தினார்.அரைகுறை ஆடையுடன் வந்து'தீப்பிடிக்க தீப்பிடிக்க' கோடான கோடி'போன்ற பாடல்களை பாடி,ஆடி அசத்தியிருந்தார்.ஓ  அதுவா படு செமத்தி பின்னர் சுவி மேடைக்கு வரும் போதெல்லாம் இளைஞர்களின் கை தட்டல்கள் அதிகம்.........சுவி, மாசிலா மணி திரைப்படத்தில் இடம் பெற்ற ஓடியோடி விளையாடு பாப்பா பாடலை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரியாஹேமேஸ் இவர் தமிழிலும் தெலுங்கிலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்தின் இசையில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.பிரியா தனக்கே உரித்தான இனிமையான குரலால் பாடி ஆடி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தினார்.கந்தசாமி திரைப்படத்தில் இடம்பெற்ற மியாவ் மியாவ் பாடலுக்குச் சொந்தக்காரி........

பிரியதர்சினி இவர் கர் நாடக இசைப்பாடகி தன் பங்குக்கு  நிறைய பாடல்களை பாடி பார்வையாளர்களை கவர்ந்திருந்தார்........


நம் நாட்டின் ரி.எஸ்.முருகேஸ பைலாப் பாடல் ஒன்றினைப்பாடியிருந்தார்.பிரசாந்தினி,தம்பிராஜ்,வபா..ஆகியோர் பிண்னனி பாடகர்களாக மேடையில் காட்சி தந்தார்கள்.......

சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியிருந்தார்.மேடையில் கலாயித்தர் ஆனாலும் நம்ம ஒருத்தர் அறிவிப்பாளராகயிருந்திருக்கலாமே என பலரும் சிலாகித்ததை கேட்கக் கூடியதாகயிருந்தது.
இலத்திரனியல் இடையிடையே சில தொந்தரவினைக் கொடுத்தது ஒலி வாங்கிக்கு.இப்படியாக சில கண்ணூறுகளைக் கழித்துவிட்டுப்பார்த்தால் ........ராகசங்கமம் இசை மனதை மகிழ்வித்த முழு சங்கமம்....

''மீண்டும் இப்படியானதொரு இசை நிகழ்ச்சி  எப்போது என்ற எதிர்பார்ப்புக்களோடு  மக்கள் அரங்கைவிட்டு வீடேகினர்''...................

Monday, November 29, 2010

கலைக்கப்படும் கோலம்........

விழித்து,விழித்து..
தூங்க வேண்டியிருக்கிறது..
ஒர் அகதியைப் போல்....

திடீரென கண்களைத் திறக்கும்
அதிகாலைப் பொழுதில்..
இதயம் ஒரு கணம்
நின்ற துடிக்கிறது....

கூதலின் சாரலுக்குள்
நீந்துகிறது ஆத்மா..
வாடகை வீட்டுக்காரனைப் போல்
திகதி குறிக்கிறது மனசு...

நம்பிக்கையிழந்த
நாளைக்காய
காத்திருக்கும் கிழவனைப் போல்..
தவமிருக்கிறது என் இதயம்
கிடைக்தாத ஒன்றுக்காய்.........

மாற்றத்துக்காய நகர்கிறது
என் பாதங்கள்..
நகர்கையில்..,
காலங்கள் செய்யும் கோலங்கள்..
எத்தனை...

மிட்டாய்க்காய் துடிக்கும்
அப்பாவிக் குழந்தையைப் போல்
யார்,யாருக்கெல்லாம் ஏங்குகிறது
குழந்தைத் தனமான,என் மனசு.....

காதலியின் வருகையில்..
ஏமாந்து போகும் காதலனைப் போல்..
என் மனசும்,இதயமும் கழற்றி வைக்கப்பட்டு..
விடிந்து போகிறது..
ஒவ்வொரு இரவும்.................

எரிந்து வீழ்வேன்...........

இப்போதெல்லாம்..
வாழ்க்கையை..
கோபங் கொண்டு பார்க்கிறது
வெட்கங் கொண்ட என் மனசு........

எரிந்து வீழ்வேன்.
ஒரு தீக் குச்சியாய்..
என்னையே எரித்துக் கொள்வேன்.
வாழப்படதா வாழ்க்கைக்காய்....

இந்த மழைக்கு.
கரைந்து போகிறது என் வீடு..
என்னவளின் ஞாபகங்களையும்
கரைத்துப் போகிறது..
நாளைய மகிழ்ச்சிக்காய்..
தூக்கத்தை ஒத்தி வைக்கிறது.
எனதான இன்றைய இரவு...

பெறுமதியற்றுப் போன
ஊமையின் மொழியைப் போல்
எனது உணர்வுகளும்..
எனக்குள்ளேயே செத்துப் போகிறது.....

இருப்பினும்,
உறவுகளின் உணர்வுகள்தான்
எனக்கான நாளைய நம்பிக்கை....இப்போதெல்லாம்..................

Thursday, November 25, 2010

காற்றலையில் கலந்த என் கவிதை.............

வசந்தத்ம் எப்.எம்.இல்,வசந்த நிலா நிகழ்ச்சி செய்கின்ற போது நான் பாடலகளுக்கிடையில்,என் கவிதைகளையும் சொல்லி ஒலிபரப்புவேன்.ஏராளமான நேயர்கள் என் கவிதைகளைக் கேட்டு என்னை வாழ்த்தி இருந்தார்கள்...காற்றலையில் கலந்த கவிதைகளை பதிவில் தர வேண்டும் என அநேகமானவர்கள் கேட்டிருந்தார்கள்....நேரம் கிடைக்கின்ற போது அவ்வப்போது அந்த கவிதைகளை பதிவு செய்வேன் நண்பர்களே...இன்று நான் பதிவ செய்கின்ற கவிதைகள் இவை...............


சந்திக்காத அந்திகளில்..
அடம் பிடித்து அழுதவளே..
உனது வார்த்தைகளை ஊமையாக்க
எப்படி உன்னால் முடிந்தது.................
...........................................................
உனதானவைகளை
பரிமாறிக் கொள்ளும் பாத்திரமாய்
நானிருந்தேன்....
எனதானவைகளை
சொல்ல வந்த போது
இன்னொருவனின்
பாதியாய் நீ

விலக்கப் பட்ட காதல்
எனக்குள் விலங்கிட்டது..
விலகிய உறவு
எனக்குள் நெருக்கமானது
ஆக,காதலும்,உறவுகளும்
பெறுமதியற்ற இலக்கம்..........

.................................................
உன் ஞாபகங்களை...
எரிப்பதற்கு.......
உன் தீக் குச்சியைக் கொடு..
எரிந்து சாம்பலாகி
காற்றோடு கலக்கட்டும்........
............................................

வயது காத்திருப்பதில்லை..
பொறுப்புக்கள் கழிவதில்லை..
சுமைகள் குறைவதில்லை..
இப்படியே மனசு நொந்து கொள்கிறது...
வாழ்க்கை நெடுகிலும்........
.............................
மயிலறகு வார்த்தைகளால்.
ஸ்பரிசம் செய்து கொள்ள தவமிருக்கிறது மனசு...
கற்பனையில் கரைகிறது இரவு......
..........................................................
உயிர்களின் மீது
சத்தியம் செய்து காதல் செய்தோம்..
உதிர்ந்தது காதல் பூ..
வெட்கம் கொண்ட உயிர்.
வெட்டப்படாத வாழ்க்கைக்காய் நகர்கிறது....
...................................................
கவி சொல்லும்
என் நெஞ்சே..
காதல் தந்து
காணாமல் போன மாயமென்ன......?

..............................
உறக்கத்தை ஒரு கணம்
ஒத்தி வைத்தி விட்டு..
இரக்கத்தை மறந்தவளை
எண்ணிப் பாடுகிறது..
வஞ்சிக்கப் பட்ட இதயம்..
.......................................

வாழ்க்கை.......

வாழ்க்கை சிலர் சந்தேஷமாக பேசுவார்கள்,இன்னும் சிலர் கவலையாக கொட்டத்தொடங்குவார்கள்,வாழ்க்கை இது நிம்மதியாகவும்,மகிழ்ச்சியாகவும் அமைய மனிதனுக்குள் எத்தனை போராட்டங்கள்,வெட்டுக்குத்துக்கள் அவனவனது செயற்பாடுகளை பொறுத்தே அவர்களது வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகின்றது.

ஆக,நாம் பிறந்தோம்,வாழ்ந்தோம்,மடிந்தோம்,என்றில்லாமல் நமது வாழ்க்கை மற்றவர்களுக்கு நல்ல பாடமாக இருக்க வேண்டும்.நமது இளமைக்காலத்தை வீணே கழித்துவிட்டு காலத்தை பழி போடக்கூடாது.இளமையிலே நமது முதுமைக்குரியதை தேடிக்கொள்ள வேண்டும்.இளமை சோம்பல் உள்ளதாகயிருந்தால்,முதுமை தேவையுள்ளதாகவே இருக்கும்.இளமைக்காலத்தை சொகுசாக கழித்தோம் என்றால்,முதுமை கடினமானதாகவே இருக்கும்.
இளமையில் நாம் கற்கிறோம்,முதுமையில் புரிந்துகொள்கிறோம்.அன்புள்ள இதயம் என்றும் இளமையாகத்தான் இருக்கும்,மனம் ஒரு போதும் முதுமையடைவதில்லை....

இரண்டு விடயங்களை நாம் இழந்த பிறகுதான் மதிக்கிறோம்.......
01.ஆரோக்கியம்.........02.இளமை......(இப்போதாவது இந்த இரண்டின் பெறுமதி உங்களுக்கு புரிகிறதல்லவா?..)
வாழ்க்கையில் அழுது கொண்டே பிறந்து,குறை கூறிக் கொண்டே வாழ்ந்து ஏமாற்றத்துடன் சாகிறோம்.
வாழ்க்கை இதுதானென்று நாம் உணர்வதற்குள் பாதி வயது போய் விடுகிறது.வாழ்க்கை பல மேடு,பள்ளங்களை தாண்டித்தான் வெற்றி பெற வேண்டும்.வாழ்க்கை என்பது புனிதமான யாத்திரை அதில் நீண்டகாலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல........

எவ்வளவு நல்ல முறையில் வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம்.அன்பு,அறிவு,துணிவு.நேர்மை,கனிவு,உண்மை போன்ற நற் பண்புகள் கொண்ட மனிதனுக்கு இந்த உலகம் ஓர் இன்பமான வாழ்க்கையை அமைத்துத் தரும்..........வாழ்க்கையை வாழ்ந்துதானே பார்ப்போம் நண்பர்களே...........................

Tuesday, November 23, 2010

என் கவிதை

உனக்கான கவிதை
என்னிடமே திரும்பி வருகின்றன
பாவியின் பிரார்த்தனையைப் போல.....


உன்னால் வந்த கவிதை
உன்னாலேயே ஏளனம் செய்யப்படுகிறது
இதுவென்ன கவிதையென்று
பாவம் கவிதை


என் இதயம் பேசிய
 ஒற்றை ஞாபகங்ளை
நீ திருடிக் கொள்கிறாய்
நான் கதறக் கதறக்...........

வந்தவைகளையும்
போனவைகளையும்
பேசியவைகளையும்
கவிதை யென்றேன் நான்,
கதை யென்றாய் நீ....

நீ கதை யென்றாலும்,
காவியமென்றாலும்
எனக்கொன்றுமில்லை,
நான் எனக்குச் சொந்மான கவிதையொன்றுடன் புறப்படுகிறேன்........................

Monday, November 22, 2010

உங்கள் வரவுக்கு ரொம்ப நன்றி.என் பதிவுக்கு முதலாவதாக வந்த பெருமை உங்களையே சாரும் தொடர்ந்தும் காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்...............

Sunday, November 14, 2010

அகதியான காதலியின் விலாசம் தேடி........

                                              

உன்னை
தேடி வந்தேன்.உன் தெருவுக்கு
நீண்ட நாட்களுக்கு பிறகு
கல கலப்பும் எழிலும்
வசந்தங்களும் வீசுகின்ற உன் தெருவில்
அசிங்கங்களும் மனிதவாடையும்
வரவேற்றன.....

பூட்டப்பட்ட உன் வீடும்
தேய்ந்து போன நாயும்
செத்துப்போன
மரம், செடி,கொடிகள்
தூரத்தில் ஆயுதம் தரித்த சில மனிதர்கள்
வேறு யாருமில்லை....

நானும் நீயும் வசந்தங்கள் மணக்க
கதை பேசி மகிழ்ந்த உன் முற்றம்
பற்றைக் காடாய்...........
என்ன செய்வது
விதி இதுதானென்றுவந்த வழி திரும்பினேன்
இருந்தாலும்,
நீ இல்லாத சோகம் வழி நெடுகிலும் கண்ணீராய்
கண் மணியே நீ எங்குள்ளாய் அகதியாய்..
உனது விலாசத்தை தாபாலிடு
அங்காவது வந்து
உன்னை சந்திக்கிறேன்..........

( 02.12.2007...ஞாயிறு தினக்குரலிலும் பார்க்கலாம்)

Monday, November 8, 2010

நிலவும்......நீயும்........

நிலவு அழகானது
நீ ஆர்ப்பாட்டமானவள்
நிலவு குளிரானது
நீ சூடானவள்
நிலவு மகிழ்ச்சி
நீ துக்கம்
நிலவு அழகான கவிதை
நீ கவிதைக்கான கருவூலம்
நிலவு நியாயம்
நீ அநியாயம்
நிலவு சரித்திரம்
நீ சகாப்தம்
நிலவை பார்த்தால் அன்பு
நீ பார்த்தால் வம்பு
நிலவு உலகின் பிரகாசம்
நீ எனக்கு அமாவாசை
நிலவு எல்லோருக்கும் பிடிக்கும்
நீ எல்லோரையும் பிடிப்பாய்


நிலவு முழுமை
நீ வெறுமை
நிலவு நிஜம்
நீ நிழல்
நிலவு வஞ்சகமற்றது
நீ வஞ்சகக்காரி
நிலவு சிரித்தால் சுகம்
நீ சிரித்தால் சூழ்ச்சி
நிலவு வசந்தம்
நீ வரட்சி
நிலவு  எல்லோருக்கும் காதல்
நீ ஒருவரின் காதலி என்று எல்லோருக்கும் நடிப்பவள்
நிலவு அழுவதில்லை
நீ முதலைக் கண்ணீர்வடிப்பவள்
நிலவு பேசத் தெரியாத பொக்கிஷம்
நீ பேசத் தெரிந்த கக்கிஷம்

இத்தனை வித்தைகளை
உன் பர்தாவுக்குள் மூடி மறைக்கும் உனக்கு
யார் நிலவென்று பெயர் வைத்தார்கள்......?
இன்னும் எனக்கு பரியவில்லை.........................

Friday, November 5, 2010

என் இனிய உறவுகளே.....

என் இனிய உறவுகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும்,இதயம் கணிந்த வணக்கம்.அஸ்கரின் பகிர்வுகளுடாக உங்களுடன் பேசுவதில் மிக்க மகிழ்ச்சி,அஸ்கரின் பகிர்வுகள் நிறையவே பேசும் இணைந்திருங்கள் நண்பர்களே...................