Tuesday, November 30, 2010

ராகசங்கமம் இதயசங்கமம்......

கோடைக்குப் பினனரான மழையைக் கண்டு மகிழ்வதைப் போல்,நீண்ட இடவெளிக்குப் பிறகு முழுமையான இசை இரவை ரசித்த மகிழ்ச்சி எனக்குள்.இந்தியாவின் 'ராக சங்கமம்'இசையில் தென்னிந்திய திரைப்படப்பாடகர்களும்,பாடகிகளும்,நிகழ்ச்சியை அற்புதமான குரல் வளத்தால்.ரசிகர்களை அசத்தியமைதான் இத்தனை மகிழ்ச்சிக்குக் காரணம்.

28.11.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு 'ராக சங்கமம்'இசை கொட்டத் தொடங்கியது.வசந்தம் TV.வசந்தம் FM.வீரகேசரி பத்திரிகையின் ஊடக அனுசரனையில் மருதானை சென்.ஜோசப் உள்ளக அரங்கில் இது இடம் பெற்றது.

வெளியில் இயற்கை மழையில் நனைந்து கொண்டு இசை மழையில் நனைய வந்த மக்கள் கூட்டத்தால் அரங்கு நிரம்பி வழிந்தது.ஆக,ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்க தயாராகயிருந்தார்கள்,தென்னிந்திய பாடகர்களான,மனோ, மதுபாலகிருஷ்ணன்,எம்.எல்.ஆர்.கார்த்திகேயன்,பாடகிகளான,பிரியதர்சினி,பிரியாஹேமேஸ்,சுவி,இவர்களுடன்,கலக்கப்போவது புகழ்,விஜய் ரி.வி.யில் ஜோடி நம்பர்1 இலும் அசத்திய சிவகார்த்திகேயன்,ரோபோ சங்கர்...........இசை ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய தோமஸ், பென்.ட்ரம்ஸ் ஆகியோருடன் ஏனையோர்களும் இணைந்து இசை வழங்கினர்.

இனி யென்ன இசை மழைதான்....................

மனதோடு நிறைந்த மனோ நிகழ்ச்சியை ஆரம்பிக்க முதலாவதாக பாடிய பாடல் 'எங்க ஊர் பாட்டுக்காரன் திரைப்படத்தில் இடம் பெற்ற 'செண்பகமே செண்பகமே..சொல்லவா வேண்டும் அரங்கே அதிர்ந்தது கரகோஷத்தால்,அதற்கு பிறகு 'ஓ கிக்கு ஏறுது' 'வீரபாண்டி கோட்டையிலே' 'காட்டுக் குயிலின் மனசுக்குள்ள' சங்கீத ஜாதி முல்லை'இது போன்ற பாடல்களை பாடி ரசிகர்களை திருப்தி படுத்தினார்,

இள நெஞ்சங்களில் குடி கொண்டுள்ள  மதுபாலகிருஷ்ணன் முதலாவதாக பாடிய பாடல் நான் கடவுள் திரைப்படத்தில் இளைய ராஜாவின் இசையில் இடம்பெற்ற 'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்' இந்தப் பாடல் மூலமாக தன் குரல் வளத்தின் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் மது.இந்தப்பாடல்  இவருக்கு இந்தியாவின் 'மிர்ச்சி'விருதினை பெற்றுக் கொடுத்தது.அதனைத்தொடர்ந்து,கனா கண்டேனடி,கொஞ்ச நேரம்,தண்ணி தொட்டி தேடி வந்த,...போன்ற பாடல்களைபாடி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டார்.இருந்த போதிலும்,அவரது ரசிகர்கள் மது என அழைத்தும்,கை தட்டியும்,அவர் ரசிகர்களுக்கு எந்த வில்டப்பும் கொடுக்கவில்லை.(மது ரசிகர்கள் பாவம்)உருவத்தில் பெரிதான,வயதில் இளமையான எம்.எல்.ஆர்.கார்த்திகேயன் தனது அட்டகாசமான,துடிப்பான குரலால் ரசிகர்களையும்,அரங்கேயும் குசிப்படுத்தினார்.'ஓ சாந்தி' அரிமா, ஹோசானா,ஜே ஹோ,போன்ற பாடல்களை தனியாகவும்,ஜோடியாகவும் இணைந்து ஆடிப்பாடி ரசிகர்களை பரவசப்படுத்தியிருந்தார்.எந்த வந்தாவுமின்றி மக்களுக்குள்ளேயே வந்து ஆடிப்பாடியிருந்தார் நம்ம கார்த்திகேயன்.


பாடகி சுவியை அழைக்கின்றபோது தொகுப்பாளர்,இளைஞர்களுக்கு ரொம்பபிடிச்ச பாடகர் என அழைத்தார்.அப்போது நான் நினைத்தேன்.துள்ளல் பாடல்களை பாடக்கூடியவரென்று.மேடைக்கு வந்த பிறகுதான் புரிந்தது அந்த கண்ராவி சுவி குத்துப்பாட்டுக்களோடு சேர்த்து நம்ம மனசினையும் குத்தினார்.அரைகுறை ஆடையுடன் வந்து'தீப்பிடிக்க தீப்பிடிக்க' கோடான கோடி'போன்ற பாடல்களை பாடி,ஆடி அசத்தியிருந்தார்.ஓ  அதுவா படு செமத்தி பின்னர் சுவி மேடைக்கு வரும் போதெல்லாம் இளைஞர்களின் கை தட்டல்கள் அதிகம்.........சுவி, மாசிலா மணி திரைப்படத்தில் இடம் பெற்ற ஓடியோடி விளையாடு பாப்பா பாடலை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரியாஹேமேஸ் இவர் தமிழிலும் தெலுங்கிலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்தின் இசையில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.பிரியா தனக்கே உரித்தான இனிமையான குரலால் பாடி ஆடி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தினார்.கந்தசாமி திரைப்படத்தில் இடம்பெற்ற மியாவ் மியாவ் பாடலுக்குச் சொந்தக்காரி........

பிரியதர்சினி இவர் கர் நாடக இசைப்பாடகி தன் பங்குக்கு  நிறைய பாடல்களை பாடி பார்வையாளர்களை கவர்ந்திருந்தார்........


நம் நாட்டின் ரி.எஸ்.முருகேஸ பைலாப் பாடல் ஒன்றினைப்பாடியிருந்தார்.பிரசாந்தினி,தம்பிராஜ்,வபா..ஆகியோர் பிண்னனி பாடகர்களாக மேடையில் காட்சி தந்தார்கள்.......

சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியிருந்தார்.மேடையில் கலாயித்தர் ஆனாலும் நம்ம ஒருத்தர் அறிவிப்பாளராகயிருந்திருக்கலாமே என பலரும் சிலாகித்ததை கேட்கக் கூடியதாகயிருந்தது.
இலத்திரனியல் இடையிடையே சில தொந்தரவினைக் கொடுத்தது ஒலி வாங்கிக்கு.இப்படியாக சில கண்ணூறுகளைக் கழித்துவிட்டுப்பார்த்தால் ........ராகசங்கமம் இசை மனதை மகிழ்வித்த முழு சங்கமம்....

''மீண்டும் இப்படியானதொரு இசை நிகழ்ச்சி  எப்போது என்ற எதிர்பார்ப்புக்களோடு  மக்கள் அரங்கைவிட்டு வீடேகினர்''...................

2 comments:

  1. உங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது .
    நிறையை மட்டும் காட்டாமல் , "ரசிகர்கள் மது என அழைத்தும்,கை தட்டியும்,அவர் ரசிகர்களுக்கு எந்த வில்டப்பும் கொடுக்கவில்லை.(மது ரசிகர்கள் பாவம்)" என குறைகளையும் கூறியுள்ளிர்கள் ....

    ReplyDelete
  2. உங்கள் அவதானத்திற்கு..நன்றி............

    ReplyDelete