Monday, May 16, 2011
களவு போகும் ஞபாகம்...
வானம் கறுத்து
பயமுறுத்தும் இரவிலும்
நாய் குரைத்து பேய்கள் ஊளையிடும் பொழுதிலும்
நீ எனக்குள்
சாரலாய், சாமரமாய்,சில நேரம் தென்றலாய் வருடுகிறாய்..
உன் ஞாபகங்களால் என்னை போர்த்திக் கொள்கிறாய்.......
விழி திறந்து....
உன்னை தேடுவேன்.....
எட்டாத தூரத்தில் நீ இருப்பாய்...
அடையமுடியா ஒன்றுக்காய் கொட்டாவி விட்டதாய்
ஏமாந்து போகும் என் மனசு....
பக்கத்தில் நீ இருப்பாயென காத்திருந்து...
நொந்து கொள்ளும் என் விழி......
நொந்து நகரும் நாட்களில்
நெஞ்சோரம் வந்து ஆறுதல் சொல்லும்
பக்குவமான உன் வார்த்தைகள்..
சில நேரம்..
வெறுப்போடு கழியும் பொழுதுகளை
விருப்பமுள்ளதாக்கும் உனதான காதல்....
தூரமாகிப் போன நமது காதலை
நேற்று ஞாபகப்படுத்தினாய்
அப்போது...
உன் வார்த்தைகள் பனித்துளியாய்
என்னை நனைத்தன....
அது
அழகாய் மிக அழகாய் என்னை பரவசப்படுத்தின...
இப்படியெல்லாம் இருக்கும் நீ..
நினைவுகளோடு மட்டும்தான்
என்னோடுயிருக்கிறாய்....
என் நினைவின் சொந்தக்காரியே..!
இரவும் பகலும்
மாறி மாறி
என்னை வேட்டையாடிக் கொண்டிருப்பதை அறிவாயா..?
Thursday, December 30, 2010
நட்புகளின் பிரிவு....
சிலரின் நட்பைப்பார்த்து ஊரே பொறாமைப்படும்.அந்தளவிற்கு அவர்களது நட்பு ஆழமாய் காணப்படும்.இப்படிப்பட்ட நட்பாகத்தான்.றமீஸ் மற்றும் றிம்ஸானின் நட்பு காணப்பட்டது.பல வருடங்களாக எந்த நிலையிலும் பிரியாமல் அன்பாய்,நட்பாய் பழகி வந்தார்கள்.பலரும் மூக்கில் விரல் வைத்து பேசிக் கொள்ளும் இவர்களது அற்புதமான சிநேகிதத்தில் திடீரென விரிசல் ஏற்படுகிறது.காரணம் றிகாஸா என்ற பெண் இவர்களின் வாழ்க்கையில் நுழைகிறாள்.றிகாஸாவை றமீஸ் காதலிக்கிறாள்.இவர்களது காதலும் நீடிக்க காலப்போக்கில்,றிகாஸா றமீசுக்கு பல கட்டளைகள் இடுகிறாள்.றமீசும் றிம்ஸானும் பழகும் நட்பைப்பார்த்து அவள் பயப்படுகிறாள்.இவர்களது இறுக்கமான இந்த நட்பால், தன் மீதான பாசம் குறைந்து விடுமோ என்று அஞ்சியவள் அவள் தன் காதலனான றமீஸை றிம்சானோடு பேசுவதை குறைத்து விடுமாறு சொல்கிறாள்.இதன் பின்னர் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது.
சிறு வயது முதல் நட்பாயிருந்த றிம்சானோடு அவனால் பேசாமல் இருக்க முடியவில்லை.அன்பான காதலியையும் கரம் பிடிக்க வேண்டும்.காதலியை வெறுப்பதற்கும் அவனால் முடியவில்லை. ஆக!நட்பா, காதலா,என்ற குழப்பத்திலிருக்கும் இவனைப்பார்த்து நான் சொன்னேன்....
பாசத்தோடு பழகிய நட்பு
அவளது இதயத்தில் கரைந்து நிற்கிறது
பார்த்து பார்த்து பிரியும் விழிகளில் பிதுங்கி நிற்கிறது
பல வருடங்களாய் பயணித்த அன்பு
அவள் பாதத்தில் மண்டியிடுகிறது
பழகிய உறவுகள் பிரியும் வலி
எனக்கும் புரிகிறது.........
(இது வசந்த நிலாவில் நேயர்களின் கவிதைக்காய் ஒலிபரப்பான பிரதி)
உன்னாலான ரசனை.......
கோபத்திலும்
உன்னால் மட்டும்
எப்படி அமைதியாயிருக்க முடிகிறது...
நான் ஆரவாரப்படும் பொழுதெல்லாம்
ஓரப்பார்வை பார்த்து
உன் சிறு புன்னகையால்
என்னை ஆசுவாசப்படுத்துவாய்
எப்படி இந்த கலையைக் கற்றுக் கொண்டாய்.....
சில நேரம்
இமை வெட்டாமல்
நான் பார்க்கும் போது
வளைந்து,நெளிந்து போகிறாய்
அந்த வளைதலிலும்,நெளிதலிலும்
எத்தனை அழகு இருக்கிறது
அது உனக்குத் தெரியுமா........
நீ
அழகாய் வரும் போது
இவள் மனைவியாகக் கூடாதா.?என்பது பலரின் பிரார்த்தனை
அழகுருவமெடுத்து
பல இதயங்களை கவர
உன்னால் எப்படி முடிகிறது........
நீ
உதடு விரித்து
புன்னகைக்கிறாய்
நான் உன்னில்
சரிந்து விழுகிறேன்..
நீ
கவிதையை
அதிகம் ரசிக்கிறாய்
உன்னை ரசிப்போர்
அதிகம் பேர் நீ அறிவாயா...?
காதலன் கனவு வரை
கணவன் கல்லரை வரை
இது
நீ அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை
எப்படி உன்னால் இந்த தத்துவத்தை
கற்பனை பண்ண முடிந்தது....
ஆக!நீ கற்பனையின் நாயகியா....?
கணவனுக்கு அன்பான மனைவியாய்
பிள்ளைகளுக்கு பாசமுள்ள தாயாய்
உறவுகளுக்கு நல்ல தோழியாய்
எப்போதும் நீ இருப்பாய்..
அது உன் ஒவ்வொரு அசைவிலும்
எனக்குத் தெரிகிறது.........
இப்படியெல்லாம்
இருக்கும் நீ கவிதையை படிக்கிறாய்..
நான் உன்னை படிக்கிறேன்.........
Wednesday, December 29, 2010
பின் தொடர்தல்..........
24.04.2001..திங்கட் கிழமை அன்று என் பிறந்த நாளும் கூட,கதிரவன் நடு உச்சியில் உட்கார்ந்து கொண்டு,தன் சுடர்களினால் பூமியைப்பதம்பார்க்கிறது.உம்மாவின் மதிய நேர ருசியான சமையலை உண்டபின்.என் வீட்டுக்குப்பின்னால்.அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றங்கரையோரம் வந்து காற்று வாங்துவது என் வழக்கம்.(அங்கு அநேகமானோர்,அந்த ஆற்றங்கரையோரம்தான் தங்களது ஓய்வை கழிக்க வருவாங்க)அப்படியேதான் ஒரு நாள் நான் ஒய்வைக்கழித்துக் கொண்டிருக்கும் பொழுதில் என் மேனியில் கொட்டிக் கொண்டிருக்கும் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருக்கிறது என் ஊர் ஆற்றங்கரையோரக் காற்று.ஆற்றங்கரையோரம் நீண்டு,வளைந்து வளர்ந்திருக்கும் தென்னை மரத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி என்னுள் அலை மோதிக் கொண்டிருக்கும் அவளது நினைவுகளை மறந்து கொண்டிருக்கிறேன்.இயற்கையை ரசிக்கிறேன்.ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் மீன் குஞ்சுகள் கூட்டாய் கரையை மோதி மோதி விளையாடுகின்றன.புற் தரையில் மழலை
மொழி பேசும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.பசு மாடுகள் புற்களை மேய்ந்து கொண்ருக்கிறது.இப்படியாக மனதை ரம்மியப்படுத்தும் எழிலை ரசித்துக் கொண்டிருக்கும் போது.அக்கரையில் ஒரு அழகிய பெண் பனை மட்டையில் கிளி நடப்பதுபோல் நடந்து போகிறாள் அழகாய் மிக அழகாய்....எனக்குள் வதை செய்து கொண்டிருக்கும் அவளது நினைவுகளை மறந்து கொண்டிருக்கும் போது அவள் மீண்டும் என் ஞாபகத்தில் வந்து என்னை தொலைக்கிறாள்..அக்கரையில் நடந்து போகும் பெண் அவளாகயிருக்குமோ...கோடி அழகை தன்னுள் வைத்து எப்படியெல்லாம் என் மனதை திருடுகிறாய்..அவளை மறக்க மந்திரங்கள் செய்த போதும்,தந்திரமாய் என்னுள் நுழைகிறாள்..
இக்கரையில் நானிருக்க........அக்கரையிலிருந்து எப்படியெல்லாம் என்னை கொள்கிறாய்......
உச்சி வெயில்
வியர்வை
காற்று
ஆற்றங் கரை
தென்னை மரம்
இயற்கையின் அழகு
...இவையெல்லாம் மறந்து போக...உன் நினைவுகளுடன் மாத்திரம் வழமை போல் வீடேகினேன்.......
Tuesday, December 28, 2010
எங்களைக் காத்த கடல் ..............
எங்களைக் காத்த கடல்
வேறோடு பிடுங்கியெறிந்த மாயமென்ன..
எங்கள் சொத்துக்களை,
சுருட்டிப்போன வேகமென்ன....
எப்போதும் கடலை நம்பிய உறவுகள்
சுனாமி வந்து உயிர்களை பிடுங்குமென்று நம்பியதுண்டா........
மரணங்களைக் கொண்டு வந்த
சுனாமியே..உன்னை மறப்பது எப்படி..
தூங்கும்போதும்,விழிக்கும் போதும்
என் உம்மா கண் முன்னே மகனே என்கிறாள்
வாப்பாவிடம் காசு கேட்கிறேன் மிட்டாய் வாங்க
தம்பி எனக்குத் தெரியாமல் என் சேட்டைப் போட்டுப் போகிறான்
தங்கச்சி வந்து நானா கடைக்குப் போனாள் சொக்லெட் வாங்கித்தாங்கவென்று
அடம் பிடிக்கிறாள்..பக்கத்து வீட்டுக்கார நண்பன்
விளையாடுவதற்காய்
கிரிக்கெட் மட்டேயோடு நிற்கிறான்
என் வீட்டு வாசற் படியோரம்..................
காதலி இரவில் வந்து தூக்கம் தொலைக்கிறாள்
இப்படி பல நினைவுகள் மாத்திரம்தான் மீதமிருக்கிறது
இவர்கள் மீளாப் பயணத்தில்,சுனாமியின் அரவனைப்பில்
மண்ணுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்...........
அதிர்வுகளை ஏற்படுத்தி
உள்ளங்களை அதிர வைத்தாய்
அஞ்சாத மனிதர்களை அச்சம் கொள்ள வைத்தாய்
நீ ஊருக்குள் வந்து அதிசயங்கள் பல நிகழ்த்தினாய்........
கஞ்சிக்கும் வழியின்றி
கஷ்டப்பட்ட மனிதர்களை
எட்டியும் பார்க்காத பணக்காரர்கள்
ஏழை வீட்டில் அடைக்கலமானதும் அன்றுதான்
சுனாமி பொதுவானது அதனாலதான் பாகுபாடின்றி தாக்கியது...........
மனிதன்.....மனிதனை வேட்டையாடும்
இப் பூமியில்,
இயற்கையின் கோபம் எத்தனை கொடூரமானது
ஆக!சுனாமி நமக்கு பாடம் கற்றுத் தந்திருக்கின்றதல்லவா..?
ஒரு உயிரின் இழப்புக்கே
தலையில் அடித்தழும்
நம் தாய்மார்கள்
இலட்சக்கணக்கான பிள்ளைகளை
சுனாமியிடம் பறி கொடுத்து
எப்படி அழுதிருப்பார்கள்..........
முத்தமிட்டு முத்தமிட்டு
பழகிய பல உறவுகள்
மூக்கைப் பொத்திக் கொண்டு
உறவுகளின் உடல்களைத் தேடியதும் சுனாமியன்றுதானே.....
கடற்கரையில் மீன்களைத்தான் அள்ளியெடுத்தோம்
சுனாமி மனிதப் பிணங்களையல்லவா..அள்ளியெடுக்கவைத்தது........
ஆறாத வடுக்களைத் தந்து
அடக்கமாய் அலையடித்துக் கொண்டிருக்கும் கடலே
இனியும்...ஊருக்குள் வருவாயோ....
வந்து விடாதே.....
நீ வந்தால் யார்தான் இங்கு மீதமிருப்பார்கள்........
வேறோடு பிடுங்கியெறிந்த மாயமென்ன..
எங்கள் சொத்துக்களை,
சுருட்டிப்போன வேகமென்ன....
எப்போதும் கடலை நம்பிய உறவுகள்
சுனாமி வந்து உயிர்களை பிடுங்குமென்று நம்பியதுண்டா........
மரணங்களைக் கொண்டு வந்த
சுனாமியே..உன்னை மறப்பது எப்படி..
தூங்கும்போதும்,விழிக்கும் போதும்
என் உம்மா கண் முன்னே மகனே என்கிறாள்
வாப்பாவிடம் காசு கேட்கிறேன் மிட்டாய் வாங்க
தம்பி எனக்குத் தெரியாமல் என் சேட்டைப் போட்டுப் போகிறான்
தங்கச்சி வந்து நானா கடைக்குப் போனாள் சொக்லெட் வாங்கித்தாங்கவென்று
அடம் பிடிக்கிறாள்..பக்கத்து வீட்டுக்கார நண்பன்
விளையாடுவதற்காய்
கிரிக்கெட் மட்டேயோடு நிற்கிறான்
என் வீட்டு வாசற் படியோரம்..................
காதலி இரவில் வந்து தூக்கம் தொலைக்கிறாள்
இப்படி பல நினைவுகள் மாத்திரம்தான் மீதமிருக்கிறது
இவர்கள் மீளாப் பயணத்தில்,சுனாமியின் அரவனைப்பில்
மண்ணுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்...........
அதிர்வுகளை ஏற்படுத்தி
உள்ளங்களை அதிர வைத்தாய்
அஞ்சாத மனிதர்களை அச்சம் கொள்ள வைத்தாய்
நீ ஊருக்குள் வந்து அதிசயங்கள் பல நிகழ்த்தினாய்........
கஞ்சிக்கும் வழியின்றி
கஷ்டப்பட்ட மனிதர்களை
எட்டியும் பார்க்காத பணக்காரர்கள்
ஏழை வீட்டில் அடைக்கலமானதும் அன்றுதான்
சுனாமி பொதுவானது அதனாலதான் பாகுபாடின்றி தாக்கியது...........
மனிதன்.....மனிதனை வேட்டையாடும்
இப் பூமியில்,
இயற்கையின் கோபம் எத்தனை கொடூரமானது
ஆக!சுனாமி நமக்கு பாடம் கற்றுத் தந்திருக்கின்றதல்லவா..?
ஒரு உயிரின் இழப்புக்கே
தலையில் அடித்தழும்
நம் தாய்மார்கள்
இலட்சக்கணக்கான பிள்ளைகளை
சுனாமியிடம் பறி கொடுத்து
எப்படி அழுதிருப்பார்கள்..........
முத்தமிட்டு முத்தமிட்டு
பழகிய பல உறவுகள்
மூக்கைப் பொத்திக் கொண்டு
உறவுகளின் உடல்களைத் தேடியதும் சுனாமியன்றுதானே.....
கடற்கரையில் மீன்களைத்தான் அள்ளியெடுத்தோம்
சுனாமி மனிதப் பிணங்களையல்லவா..அள்ளியெடுக்கவைத்தது........
ஆறாத வடுக்களைத் தந்து
அடக்கமாய் அலையடித்துக் கொண்டிருக்கும் கடலே
இனியும்...ஊருக்குள் வருவாயோ....
வந்து விடாதே.....
நீ வந்தால் யார்தான் இங்கு மீதமிருப்பார்கள்........
Monday, December 27, 2010
வசந்த நிலா.......இது உணர்வுகளின் பகிர்வு......................
மெல்லவும் முடியாமல்,துப்பவும் முடியாமலும்,வதை செய்து கொண்டிருப்பதுதான் ஒரு தலைக்காதல்.இப்பேடியதான் காதலை தன் மனதுக்குள் வைத்திருக்கிறார்கள்.சியாத்தும்..,சியாமாவும்..இரண்டு பேரும் பல வருடங்களாக பழகி வருகின்றார்கள்.இவர்களுக்குள் ஏற்படுகின்ற சந்தோஷங்களையும்,சோகங்களையும்,மனமிட்டு பரிமாறிக் கொள்ளுமளவுக்கு இவர்களது உறவு நீடிக்கிறது.இப்படியாக பழகுதல் தொடர காலங்கள் உருண்டோடுகின்றது.ஒவ்வொரு நாளும் நகர நகர கருவில் இருக்கும் சிசு வளர்வதைப் போல்,இவர்களுக்குள் துளிர்விட்ட ஒருதலைக்காதலும் வளர்கிறது.நட்பு ரீதியாக எவ்வளவோ பேசியிருக்கிறோம்.இரண்டு பேரும் பேசிப் பிரிகின்ற பொழுதுகளில் கண்களில் ஆயிரம் காதல் தெரியும்,ஆனால் அந்த காதலை வெளிப்படுத்த முடியவில்லை.
காதலை யார் முதலில் சொல்வது என்பதில் இருவருக்குமிடையில் ஒரு போராட்டம்.நாளாந்தம் உணர்வுகளை மௌனமாக்கிப்போகும்.இந்த இரண்டு இதயங்களையும் பார்த்து நான் இப்படிச் சொன்னேன்.......
உன் அழகிய திருமுகத்தைக் காண ஏங்குகிறேன்...
ஆசையோடு உன் வரவுக்காய் காத்திருக்கிறேன்.......
இமை கூட மூடாமல் விழித்திருக்கிறேன்.........
ஈவிரக்கம் காட்டமாட்டாயா....?
ஊஞ்சலாடும் மனதை அடக்க முடியாத நான்..,
என் மனதையே புரிந்து கொள்ள முடியாத நான்...,
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் உன் பதிலுக்காக...............
(வசந்த நிலா நிகழ்ச்சியில் நேயர்களின் கவிதைக்காய் ஒலிபரப்பான பிரதி...15.07.2010)
இது வாழ்க்கைப் பயணத்தின் துயரமான......26.07.2010....
வறுமை சில குடும்பங்களை தொடர்ச்சியாக வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும்,இப்படியான வறுமைக்குள் அகப்பட்டுக்கொள்ளும் சிலர்,வறுமையிலிருந்து விடுபட வெளிநாடுகளுக்கு வேலை தேடிச்செல்வதுமுண்டு.இப்படியேதான்,அக்கரைப்பற்றில் இருக்கும் ஆஷிக்,குடும்பத்தில்,வறுமை தலைவிரித்தாடியதால்,பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு,உறவுகளிடம் கடன் பட்டுக்கொண்டு கட்டார் நாட்டுக்கு தொழில்தேடி,கடல்தாண்டி புறப்பட்டான்,குடிசைக்குள் கண்ணீரோடு நாட்களை நகர்த்திய அவனது தாய்,இனியென்ன! மகன் ஆஷிக் வெளிநாடு போய்விட்டான்.பக்கத்து வீட்டுக்காரர்களைப்போல் சந்தோஷமாக வாழலாம்.என பெருமூச்சு விட்டாள்,மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதிப்பது போல்,ஆஷிக்குக்கு விதி கட்டாரிலும் விளையாடுகிறது.நல்ல வேலை கிடைக்குமென்றுதான் வெளிநாட்டுக்குப் போனான்.ஆனால் அவனுக்கு கிடைத்ததோ,அவனது சக்திற்கு அப்பாற்பட்ட வேலை,அதாவது பாலை வனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை.என்ன செய்யலாம்,நாட்டுக்கு திரும்பி போக முடியாது.வீட்டில் வறுமை தலை விரித்தாடுகிறது.கடன் பட்டு வேறு வந்திருக்கிறோம்.விதி இதுதானென்று வேலை செய்தான்.அவ்வாறு பாலை வனத்தில் ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்த அவனுக்கு,தனது எஜமானால்,நேரத்திற்கு சம்பளம் கிடைப்பதுமில்லை,ஒழுங்காக சாப்பாடு கொடுப்பதுமில்லை,தனது உடலை வருத்தி வேலை செய்த ஆஷிக்,காலப் போக்கில்,மெலிந்து,காய்ந்து,சுட்டெரிக்கும் அந்த பாலை வனத்தில் தினம்..தினம் கண்ணீரோடு காலம் கழிக்கின்றான்.........
(வசந்த நிலாவில் நேயர்களின் கவிதைக்காய் ஒலிபரப்பான பிரதி)
Subscribe to:
Posts (Atom)


















