Thursday, December 30, 2010

நட்புகளின் பிரிவு....



சிலரின் நட்பைப்பார்த்து ஊரே பொறாமைப்படும்.அந்தளவிற்கு அவர்களது நட்பு ஆழமாய் காணப்படும்.இப்படிப்பட்ட நட்பாகத்தான்.றமீஸ் மற்றும் றிம்ஸானின் நட்பு காணப்பட்டது.பல வருடங்களாக எந்த நிலையிலும் பிரியாமல் அன்பாய்,நட்பாய் பழகி வந்தார்கள்.பலரும் மூக்கில் விரல் வைத்து பேசிக் கொள்ளும் இவர்களது அற்புதமான சிநேகிதத்தில் திடீரென விரிசல் ஏற்படுகிறது.காரணம் றிகாஸா என்ற பெண் இவர்களின் வாழ்க்கையில் நுழைகிறாள்.றிகாஸாவை றமீஸ் காதலிக்கிறாள்.இவர்களது காதலும் நீடிக்க காலப்போக்கில்,றிகாஸா றமீசுக்கு பல கட்டளைகள் இடுகிறாள்.றமீசும் றிம்ஸானும் பழகும் நட்பைப்பார்த்து அவள் பயப்படுகிறாள்.இவர்களது இறுக்கமான இந்த நட்பால், தன் மீதான பாசம் குறைந்து விடுமோ என்று  அஞ்சியவள் அவள் தன் காதலனான றமீஸை றிம்சானோடு பேசுவதை குறைத்து விடுமாறு சொல்கிறாள்.இதன் பின்னர் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது.


சிறு வயது முதல் நட்பாயிருந்த றிம்சானோடு அவனால் பேசாமல் இருக்க முடியவில்லை.அன்பான காதலியையும் கரம் பிடிக்க வேண்டும்.காதலியை வெறுப்பதற்கும்  அவனால் முடியவில்லை. ஆக!நட்பா, காதலா,என்ற குழப்பத்திலிருக்கும் இவனைப்பார்த்து நான் சொன்னேன்....




பாசத்தோடு பழகிய நட்பு
அவளது இதயத்தில் கரைந்து நிற்கிறது
பார்த்து பார்த்து பிரியும் விழிகளில் பிதுங்கி நிற்கிறது
பல வருடங்களாய் பயணித்த அன்பு
அவள் பாதத்தில் மண்டியிடுகிறது
பழகிய உறவுகள் பிரியும் வலி
எனக்கும் புரிகிறது.........
(இது வசந்த நிலாவில் நேயர்களின் கவிதைக்காய் ஒலிபரப்பான பிரதி)

4 comments:

  1. கவிதையிலே சொன்ன பதில் அருமை..

    அதிலும், இந்த வரி...

    //பாசத்தோடு பழகிய நட்பு
    அவளது இதயத்தில் கரைந்து நிற்கிறது//

    நல்லா இருக்குங்க. :-)

    ReplyDelete
  2. ஆழ்ந்த நட்பிற்கும்...
    அன்பான காதலுக்கும்..
    இடையில் முடிவெடுப்பது சிரமமான விஷயம் தான்..!

    ReplyDelete
  3. உங்கள் வரவுக்கு நன்றிகள் ஆனந்தி..தொடர்ந்தும் கருத்துக்கள் வரட்டும்.....அதில் வந்திருக்கின்ற சில வரிகளை தொட்டுக்காட்டியிருக்கின்றீர்கள்...அது என் இதயத்தை தொட்டுயிருக்கிறது...அது வசந்ததநிலா நிகழ்ச்சியின் போது நேயர்களின் கவிதைக்காய் சொன்னவைகள்...

    ReplyDelete
  4. ஹ்ம்ம்... நல்லா இருந்தது... பார்த்தேன்.. நீங்க கவிதையிலும்.. மென்ஷன் பண்ணி இருந்தீங்களே.

    //(இது வசந்த நிலாவில் நேயர்களின் கவிதைக்காய் ஒலிபரப்பான பிரதி)//

    வாழ்த்துக்கள்..! :)

    ReplyDelete