Wednesday, December 29, 2010

பின் தொடர்தல்..........


24.04.2001..திங்கட் கிழமை அன்று என் பிறந்த நாளும் கூட,கதிரவன் நடு உச்சியில் உட்கார்ந்து கொண்டு,தன் சுடர்களினால்  பூமியைப்பதம்பார்க்கிறது.உம்மாவின் மதிய நேர ருசியான சமையலை உண்டபின்.என் வீட்டுக்குப்பின்னால்.அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றங்கரையோரம் வந்து காற்று வாங்துவது என் வழக்கம்.(அங்கு அநேகமானோர்,அந்த ஆற்றங்கரையோரம்தான் தங்களது ஓய்வை கழிக்க வருவாங்க)அப்படியேதான் ஒரு நாள் நான் ஒய்வைக்கழித்துக் கொண்டிருக்கும் பொழுதில் என் மேனியில் கொட்டிக் கொண்டிருக்கும் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருக்கிறது என் ஊர் ஆற்றங்கரையோரக் காற்று.ஆற்றங்கரையோரம் நீண்டு,வளைந்து வளர்ந்திருக்கும் தென்னை மரத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி என்னுள் அலை மோதிக் கொண்டிருக்கும் அவளது நினைவுகளை மறந்து கொண்டிருக்கிறேன்.இயற்கையை ரசிக்கிறேன்.ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் மீன் குஞ்சுகள் கூட்டாய் கரையை மோதி மோதி விளையாடுகின்றன.புற் தரையில் மழலை
மொழி பேசும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.பசு மாடுகள் புற்களை மேய்ந்து கொண்ருக்கிறது.இப்படியாக மனதை ரம்மியப்படுத்தும் எழிலை ரசித்துக் கொண்டிருக்கும் போது.அக்கரையில் ஒரு அழகிய பெண் பனை மட்டையில் கிளி நடப்பதுபோல் நடந்து போகிறாள் அழகாய் மிக அழகாய்....எனக்குள் வதை செய்து கொண்டிருக்கும் அவளது நினைவுகளை  மறந்து கொண்டிருக்கும் போது அவள் மீண்டும் என் ஞாபகத்தில் வந்து  என்னை தொலைக்கிறாள்..அக்கரையில் நடந்து போகும் பெண் அவளாகயிருக்குமோ...கோடி அழகை தன்னுள் வைத்து எப்படியெல்லாம் என் மனதை திருடுகிறாய்..அவளை மறக்க  மந்திரங்கள் செய்த போதும்,தந்திரமாய் என்னுள் நுழைகிறாள்..
இக்கரையில் நானிருக்க........அக்கரையிலிருந்து எப்படியெல்லாம் என்னை கொள்கிறாய்......


உச்சி வெயில்
வியர்வை    
காற்று
ஆற்றங் கரை
தென்னை மரம்
இயற்கையின் அழகு

...இவையெல்லாம் மறந்து போக...உன் நினைவுகளுடன் மாத்திரம் வழமை போல் வீடேகினேன்.......

No comments:

Post a Comment