Monday, December 27, 2010

இது வாழ்க்கைப் பயணத்தின் துயரமான......26.07.2010....


வறுமை சில குடும்பங்களை தொடர்ச்சியாக வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும்,இப்படியான வறுமைக்குள் அகப்பட்டுக்கொள்ளும் சிலர்,வறுமையிலிருந்து விடுபட வெளிநாடுகளுக்கு வேலை தேடிச்செல்வதுமுண்டு.இப்படியேதான்,அக்கரைப்பற்றில் இருக்கும் ஆஷிக்,குடும்பத்தில்,வறுமை தலைவிரித்தாடியதால்,பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு,உறவுகளிடம் கடன் பட்டுக்கொண்டு கட்டார் நாட்டுக்கு தொழில்தேடி,கடல்தாண்டி புறப்பட்டான்,குடிசைக்குள் கண்ணீரோடு நாட்களை நகர்த்திய அவனது தாய்,இனியென்ன! மகன் ஆஷிக் வெளிநாடு போய்விட்டான்.பக்கத்து வீட்டுக்காரர்களைப்போல் சந்தோஷமாக வாழலாம்.என பெருமூச்சு விட்டாள்,மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதிப்பது போல்,ஆஷிக்குக்கு விதி கட்டாரிலும் விளையாடுகிறது.நல்ல வேலை கிடைக்குமென்றுதான் வெளிநாட்டுக்குப் போனான்.ஆனால் அவனுக்கு கிடைத்ததோ,அவனது சக்திற்கு அப்பாற்பட்ட வேலை,அதாவது பாலை வனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை.என்ன செய்யலாம்,நாட்டுக்கு திரும்பி போக முடியாது.வீட்டில் வறுமை தலை விரித்தாடுகிறது.கடன் பட்டு வேறு வந்திருக்கிறோம்.விதி இதுதானென்று வேலை செய்தான்.அவ்வாறு பாலை வனத்தில் ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்த அவனுக்கு,தனது எஜமானால்,நேரத்திற்கு சம்பளம் கிடைப்பதுமில்லை,ஒழுங்காக சாப்பாடு கொடுப்பதுமில்லை,தனது உடலை வருத்தி  வேலை செய்த ஆஷிக்,காலப் போக்கில்,மெலிந்து,காய்ந்து,சுட்டெரிக்கும் அந்த பாலை வனத்தில் தினம்..தினம் கண்ணீரோடு காலம் கழிக்கின்றான்.........


(வசந்த நிலாவில் நேயர்களின் கவிதைக்காய் ஒலிபரப்பான பிரதி)

No comments:

Post a Comment