Thursday, November 25, 2010

காற்றலையில் கலந்த என் கவிதை.............

வசந்தத்ம் எப்.எம்.இல்,வசந்த நிலா நிகழ்ச்சி செய்கின்ற போது நான் பாடலகளுக்கிடையில்,என் கவிதைகளையும் சொல்லி ஒலிபரப்புவேன்.ஏராளமான நேயர்கள் என் கவிதைகளைக் கேட்டு என்னை வாழ்த்தி இருந்தார்கள்...காற்றலையில் கலந்த கவிதைகளை பதிவில் தர வேண்டும் என அநேகமானவர்கள் கேட்டிருந்தார்கள்....நேரம் கிடைக்கின்ற போது அவ்வப்போது அந்த கவிதைகளை பதிவு செய்வேன் நண்பர்களே...இன்று நான் பதிவ செய்கின்ற கவிதைகள் இவை...............


சந்திக்காத அந்திகளில்..
அடம் பிடித்து அழுதவளே..
உனது வார்த்தைகளை ஊமையாக்க
எப்படி உன்னால் முடிந்தது.................
...........................................................
உனதானவைகளை
பரிமாறிக் கொள்ளும் பாத்திரமாய்
நானிருந்தேன்....
எனதானவைகளை
சொல்ல வந்த போது
இன்னொருவனின்
பாதியாய் நீ

விலக்கப் பட்ட காதல்
எனக்குள் விலங்கிட்டது..
விலகிய உறவு
எனக்குள் நெருக்கமானது
ஆக,காதலும்,உறவுகளும்
பெறுமதியற்ற இலக்கம்..........

.................................................
உன் ஞாபகங்களை...
எரிப்பதற்கு.......
உன் தீக் குச்சியைக் கொடு..
எரிந்து சாம்பலாகி
காற்றோடு கலக்கட்டும்........
............................................

வயது காத்திருப்பதில்லை..
பொறுப்புக்கள் கழிவதில்லை..
சுமைகள் குறைவதில்லை..
இப்படியே மனசு நொந்து கொள்கிறது...
வாழ்க்கை நெடுகிலும்........
.............................
மயிலறகு வார்த்தைகளால்.
ஸ்பரிசம் செய்து கொள்ள தவமிருக்கிறது மனசு...
கற்பனையில் கரைகிறது இரவு......
..........................................................
உயிர்களின் மீது
சத்தியம் செய்து காதல் செய்தோம்..
உதிர்ந்தது காதல் பூ..
வெட்கம் கொண்ட உயிர்.
வெட்டப்படாத வாழ்க்கைக்காய் நகர்கிறது....
...................................................
கவி சொல்லும்
என் நெஞ்சே..
காதல் தந்து
காணாமல் போன மாயமென்ன......?

..............................
உறக்கத்தை ஒரு கணம்
ஒத்தி வைத்தி விட்டு..
இரக்கத்தை மறந்தவளை
எண்ணிப் பாடுகிறது..
வஞ்சிக்கப் பட்ட இதயம்..
.......................................

2 comments:

  1. அஸ்கர் உங்கள் உணர்வுகள் இங்கே பதிவலையில் வந்து, கண்ணீர் விடுகிறதா? இல்லை கவலை தீர்க்கிறதா? ஆயிரமாயிரம் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளும் உள்ளத்தையும்,உயிர்த்த உடலையும் நீங்கள் ஆசைப்பட்டா கேட்டு வாங்கினீர்கள்..இல்லையே..இறைவன் தந்த அனைத்துமே அவனாலேயே எடுக்கப்படும்வரை வாழ்வதற்கே வாழ்க்கை.. நினைவாகிய நேற்றும் நிரந்தரமில்லா இன்றும் நிச்சயமில்லா நாளையும் கூட வாழ்க்கைப் பாடமே...

    ReplyDelete
  2. நன்றி சப்னா..........மனிதனாகப் பிறந்தால் வாழ்க்கை ஒரு புத்தகம் விரும்பியோ,விரும்பாமலோ.. படித்துத்தான் ஆக வேண்டும்........

    ReplyDelete