பாசம் காட்டத் தவறியதில்லை...
பாதை விலகும் போது கண்டிக்கத் தவறியதுமில்லை...
பிரியாமல் பலதை புரியவைத்தாய்..
பலர் போற்றும் வாழ்வை படிப்பித்தாய்....அதனால்,
பாசமுடன் நெஞ்சுக்குள் வைத்திருக்கிறோம் தந்தையே....!
பிஞ்சு நான் தின்னையில் தவழ்கையில்...,
அள்ளியெடுத்து உச்சிமோர்ந்து கொள்வாய்..
மிட்டாய்க்காய் அடம்பிடிக்கையில்...
மிரட்டாமல் வாங்கித் தருவாய்...
காற் சட்டையோடு ஓடி விளையாடும் போது..,
கவனமாய் பார்த்து நிற்பாய்...
ஏடுகள் படித்து வாழ்வில் உயர..,
ஏணிப்படியாய் இருந்தீர்கள்...
கை பிடித்து பள்ளிக்கு கூட்டிப்போனீர்கள்..,
விரல் பிடித்து எழுதப் பழக்கினீர்கள்...
நெறி தவறா வாழ்வைச் சொல்லித் தந்தீர்கள்....
ஐவேளை தொழுதிட பள்ளிவாசலுக்கும் அழைத்து போனீர்கள்...
எங்கள் வாழ்வில் வெற்றிபெற பாலமாய் இருந்தீர்கள்..
அதனால்..,பத்திரமாய் நெஞ்சுக்குள் வைத்திருக்கிறோம்...தந்தையே....
பண்புடன் நீங்கள் வாழ்வதால்..,
பாசத்தோடு பார்ப்போர் பலர்..
பண்பு தவறக்கூடாது என்பதற்காய்..
ஒழுக்கமாய் வாழப்பழக்கினீர்கள்..
அதனால்..அடக்கமாய் வாழக்கற்றுக்கொண்டோம்.....
வறுமை எங்களை சூழ்ந்த போது..,
எங்கள் வயிற்றை நிரப்பி.....,
உங்கள் வயிற்றை வெறுமையாக்கினீர்கள்..
எங்கள் கண்ணீரை துடைப்பதற்காய்....
நீங்கள் கஷ்டப்பட்டீர்கள்.....
நாங்கள் உருவாக வேண்டுமென்பதற்காய்...
நீங்கள் உருக்குலைந்தீர்கள்..
ஆக..,எங்கள் வாழ்வின் பொக்கிஷம் நீங்கள்தானே....
பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை..,
ஒளி விளக்காய்யிருந்த தந்தையே...
வயது போனதாய் நீங்கள் கவலைப்படக்கூடாது..
எங்கள் வீட்டில் நீங்கள்தான் பல்கலைக்கழகம்...
உங்கள் கனவுகளை நிஜமாக்கிப் பயணிப்போம்...
உங்கள் வழியில்...எங்கள் தந்தையே......
Monday, June 20, 2011
Wednesday, June 15, 2011
அடம் பிடித்தல்......
என்னை ஏற்றுக்கொள்ள,
ஏன் அடம் பிடிக்கிறாய்.....
என் உணர்வுகளை புரியாமல்,
ஏன் விலகிப்போகிறாய்.....
நான் உன்னை நினைக்கத் தவறினால்,
நீ என்னை மறக்க நினைக்கிறாய்...
காரணம் கேட்டால்,
தீவிரவாதியைப்போல் முறைத்துப்பார்க்கிறாய்....
நீ கண்ணீரை என் மீது வீசுவாய்..
நான் புன்னகையை உன் மீது தூவுவேன்...
என்னை உதடு கடித்து முறைத்துப்பார்ப்பாய்..
அப்போது அப்பாவியாய் நகர்ந்து செல்வேன்...
என்னை உனக்கு உரத்துச் சொல்லும் போது....
நீ மௌனமாய் பயணிக்கிறாய்..
நான் உனக்கு காதல் மொழிகளால் தேனூற்றும் போது..
நீ என்னை மொழிகளால் காயப்படுத்துகிறாய்....
நான் உன்னை நேசிக்கும் போது...
நீ என்னை வெறுக்கிறாய்...
காலம் கடந்து நான் இன்னுமொருவரால் நேசிக்கப்படுவேன்..
நீ அப்போது என்னால் வெறுக்கப்பட்டிருப்பாய்....
என்னை புரிந்து கொள்ளாமலும்
ஏற்றுக் கொள்ளத் தெரியாமலும்..விலகிப் போகிறாய்..
எனக்கான காலம் வரும்..
அப்போது இன்னு மொருவரால் நேசிக்கப்படுவேன்..
உன்னை ஏற்றுக் கொள்ள முடியாமல்...
நான் தூர நிற்பேன்.....
ஏன் அடம் பிடிக்கிறாய்.....
என் உணர்வுகளை புரியாமல்,
ஏன் விலகிப்போகிறாய்.....
நான் உன்னை நினைக்கத் தவறினால்,
நீ என்னை மறக்க நினைக்கிறாய்...
காரணம் கேட்டால்,
தீவிரவாதியைப்போல் முறைத்துப்பார்க்கிறாய்....
நீ கண்ணீரை என் மீது வீசுவாய்..
நான் புன்னகையை உன் மீது தூவுவேன்...
என்னை உதடு கடித்து முறைத்துப்பார்ப்பாய்..
அப்போது அப்பாவியாய் நகர்ந்து செல்வேன்...
என்னை உனக்கு உரத்துச் சொல்லும் போது....
நீ மௌனமாய் பயணிக்கிறாய்..
நான் உனக்கு காதல் மொழிகளால் தேனூற்றும் போது..
நீ என்னை மொழிகளால் காயப்படுத்துகிறாய்....
நான் உன்னை நேசிக்கும் போது...
நீ என்னை வெறுக்கிறாய்...
காலம் கடந்து நான் இன்னுமொருவரால் நேசிக்கப்படுவேன்..
நீ அப்போது என்னால் வெறுக்கப்பட்டிருப்பாய்....
என்னை புரிந்து கொள்ளாமலும்
ஏற்றுக் கொள்ளத் தெரியாமலும்..விலகிப் போகிறாய்..
எனக்கான காலம் வரும்..
அப்போது இன்னு மொருவரால் நேசிக்கப்படுவேன்..
உன்னை ஏற்றுக் கொள்ள முடியாமல்...
நான் தூர நிற்பேன்.....
Monday, June 13, 2011
நமதான காதல்..........
உதடுகளுக்கு தாழ்ப்பாளிட்டு.....
வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு.....
விழிகளின் மொழி கொண்டு...
மௌனமாய் நகர்கிறது......
நமதான காதல்.........
புரிந்து கொள்ள முடியாத......
இதயங்களின் மொழியால்..
இரகசிய தூதுவிடுகிறோம்....நானும்,நீயும்....
அதனால் மனசுக்குள்ளேயே அடங்கிப்போகிறது..
நமதான காதல்.....யாருக்கும் தெரியாமல்....
யார் யாரோ....வருவர்,
ஆனால் நீ வர மாட்டாய்...
காலடிச் சத்தங்களில்..உன்னைத் தேடுவேன்..
அது நீயாக இருக்கமாட்டாய்....அப்போது
மலையளவு பூத்த கனவு....
மேகங்களாய் கலைந்து போகும்........
விரல்கள் தொடாத....புல்லாங்குழலில்......
இராகமாகவே எனக்குள் விழுகிறாய்......
உனக்கான பாடல் என்னிடமிருக்கிறது...
புல்லாங்குழல் உன்னிடமிருக்கிறது.......
ஆனால்,வார்த்தைகளுக்கு தாப்பாளிட்டு....
மௌனமாய்..இரவு நீள்கிறது.....
யாருக்கும் தெரியாமல்....
நமதான காதல்..மனசுக்குள்ளேயே அடங்கிப்போகிறது........
வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு.....
விழிகளின் மொழி கொண்டு...
மௌனமாய் நகர்கிறது......
நமதான காதல்.........
புரிந்து கொள்ள முடியாத......
இதயங்களின் மொழியால்..
இரகசிய தூதுவிடுகிறோம்....நானும்,நீயும்....
அதனால் மனசுக்குள்ளேயே அடங்கிப்போகிறது..
நமதான காதல்.....யாருக்கும் தெரியாமல்....
யார் யாரோ....வருவர்,
ஆனால் நீ வர மாட்டாய்...
காலடிச் சத்தங்களில்..உன்னைத் தேடுவேன்..
அது நீயாக இருக்கமாட்டாய்....அப்போது
மலையளவு பூத்த கனவு....
மேகங்களாய் கலைந்து போகும்........
விரல்கள் தொடாத....புல்லாங்குழலில்......
இராகமாகவே எனக்குள் விழுகிறாய்......
உனக்கான பாடல் என்னிடமிருக்கிறது...
புல்லாங்குழல் உன்னிடமிருக்கிறது.......
ஆனால்,வார்த்தைகளுக்கு தாப்பாளிட்டு....
மௌனமாய்..இரவு நீள்கிறது.....
யாருக்கும் தெரியாமல்....
நமதான காதல்..மனசுக்குள்ளேயே அடங்கிப்போகிறது........
Thursday, June 9, 2011
கவிஞர் பொத்துவில் அஸ்மின்,நஜ்முல்ஹூசைனுக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி பாராட்டு...........
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிதைபாடி,நம் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த கவிஞர்களான என்.எம்.நஜ்முல்ஹீசைன்,பொத்துவில் யு.எல்.எம்.அஸ்மின்.இந்த இரண்டு கவிஞர்களையும்.அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி,08.06.2011 புதன்கிழமை பாராட்டி கௌரவித்தது.....
விழாவில் பாராட்டப்பட்ட கவிஞர் நண்பர் அஸ்மினின் அழைப்பை ஏற்று மருதானையிலிருந்து நானும் அவரும் அன்று மாலை பஸ்வண்டியில் விழா இடம்பெறவிருக்கும் எல்பிட்டிகலபிளட்ஸை நோக்கி பயணித்தோம்,அங்கு கதிரைகள் வெற்றிடமாகயிருந்தது.குறிப்பிட்ட சிலர் வந்திருந்தார்கள்.அப்போது நிகழ்வு ஆரம்பமாகவுமில்லை.அகில் இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ் தலமையில் மாலை 07.00 மணியளவில் கவிஞர்களுக்கான பாராட்டு விழா ஆரம்பமானது.அந்தநேரம் மண்டபம் நிறைந்த இலக்கிய ஆர்வலர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
விழாவின் ஆரம்ப உரையை அதன் முன்னாள் தலைவரும்,முஸ்லீம்மீடியாபோரத்தின் தலைவரும்,நவமணிபத்திரிகையின்பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் நிகழ்த்தினார்.அவரது உரையில்,மலேசிய மாநாட்டில் கவிதைபாடி எங்களுக்கு பெருமை சேர்த்துதந்த இரண்டு கவிஞர்களையும் சிலாகித்துப்பேசியிருந்தார்.அதேநேரம் மாநாட்டில் அறிவிப்புச்செய்து,அரங்கை அதிர வைத்த நமது அறிவிப்பாளர்களான வீ.எச்.அப்துல்ஹமீத்,புர்கான் வீ இப்திகார்.ஆகியோரையும் நினைவுபடுத்தினார்.அதனைத்தொடர்ந்து தினக்குரல் பத்திரிகையைச் சேர்ந்த ஏ.எம்.நிலாம் உரையாற்றினார்.
நிகழ்வில் வாழ்த்து கவிதைபாட அழைக்கப்பட்ட கவிஞர் நாகூர்கனி கவிதைபாடிக்கொண்டிருக்கும்போதே,கவிமாலை பொழிவதை விட,பூமாலை சூடி அலங்கரிக்கப் போகிறேன் என்று கூறி,தான் கொண்டு வந்த பூ மாலையை நம்ம கவிஞர்கள் இரண்டு பேருக்கும் அணிவித்து மகிழ்ந்தார்.அதனைத்தொடர்ந்து மலேசிய மாநாட்டுக்கான இலங்கைக்குழுவுக்கு தலமை வகித்த கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் உரை நிகழ்த்தினார்.கவிஞர்களின் அதி திறமைகளை சுட்டிக்காட்டியதோடு,இலங்கைக்குழுவின் மலேசியப்பயணம் என்ற தலைப்பில் தனியாக உரையாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.அதற்காக நாங்களும் காத்திருக்கின்றோம்.இவர் சுகயீனமுற்றிருந்த போதிலும் விழாவுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து மலேசிய மாநாட்டில் கவிதைபாடி கலக்கிய வயதில் இளைய கவிஞரான பொத்துவில் கவிஞர் யூ.எல்.எம்.அஸ்மின் அங்கு பாடிய கவிதையை பாடி அரங்கு நிறைந் கரகோஷத்தினைகப் பெற்றிருந்தார். அதேபோல் நமது மூத்த கவிஞரான என்.எம்.நஜ்முல்ஹீசைன் அவரும் அங்கு பாடிய கவிதையைப் பாடி அரங்கு நிறைந்த கரகோஷத்தினைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து எங்கள் தேசம் பத்திரிகையின் பசீர் அலி அந்தப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் சிறு பகுதியை வாசித்துக்காட்டினார்.அதில் அவர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் என்னை மிகவும் கவர்ந்தது.அதாகப்பட்டது,அங்கு மேடையில் வீற்றிருந்த பெரும் கவிஞர்களை நமது கவிஞர்கள் கிளின்ட் வோல்ட் செய்து அசத்தினார்கள் என்பது........
பாராளுமன்ற உறுப்பினரான அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் உரை நிகழ்த்தினார்.அவரது அற்புதமான உரையினை அழகாக நிகழ்த்தினார். அந்த மாநாட்டில் கவிஞர்களின் கவிதையினை ரசித்த விதத்தினையும் தெளிவுபடுத்தியிருந்தார்.பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் அங்கு உரை நிகழ்த்துகையில் தான் இலக்கியத்தில் சிறு வயதிலிருந்து ஆர்வம் உள்ளதால்,கவிதையை ஓரளவு மதிப்பிடமுடியும்.ஆக அந்த அரங்கில் கவிதை பாடிக் கொண்டிருக்கும் கவிதைகளை மதிப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நமது கவிஞர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்று மனதிற்குள் பகை,பகைத்துக் கொண்டிருக்கும் போது கவிஞர் நஜ்முல் ஹுசைன்,கவிதை பாட வந்தவர் அரங்கை கவிதைகளால் கவர்ந்திழுத்தர் எனக் குறிப்பிட்டார்.அதனைத் தொடர்ந்து கவிதை பாட வந்த நமது இளம் கவிஞர் அஸ்மின் மிகச்சிறந்த மரபுக் கவிதையினை வாசித்து அரங்கை தன் பக்கம் கவர்ந்திழுத்தர்.இதனால் தான் மிகவும் சந்தோசப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
விழாவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதி அமைச்சர் ரஊப் ஹக்கீம் அழைக்கப்பட்டும் அமைச்சரவைக் கூட்டம் இருந்தமையால் அவரால் வர முடியவில்லை,அந்நக்கட்சியைச்சேர்ந்த செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசன்அலி,பிரதியமைச்சர் பசீர்சேகுதாவுத்,ஆகியோர் வருகை தந்திருந்தனர்.பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர்,புரவலர் ஹாசீம் உமர்,அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அங்கத்தவர்கள் என முன்னாள் அமர்ந்திருந்தனர்.விழா அரங்கில் நான்கு பெண்கள் கலந்து கொண்டமையையும் அவதானிக்க முடிந்தது......
இறுதியாக மலேசியா மாநாட்டில் கவிதைபாடிய நமது கவிஞர்களான என்.எம்.நஜ்முல்ஹீசைன்,யூ.எல்.எம்.அஸ்மின் ஆகியோருக்கு புரவலர் ஹாசீம்உமரினால்.பொன்னாடை போர்த்தி,பாராட்டுச்சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்தப்பட்டு,அங்குவந்திருந்த இலக்கியவாதிகள்,ஆர்வலர்கள்,அதிதிகள் எல்லோரும் கைகுலுக்கி வாழ்த்துச்சொல்லி அங்கிருந்து விடைபெற்றனர்.நானும் சந்தோஷம் தரும் நிகழ்வில் கலந்து கொண்ட மகிழ்ச்சியோடு வீடேகினேன்..........
Monday, June 6, 2011
சிதையும் நினைவுகள்.......
தெரியாதவர்களாய்
கடந்து போகிறோம் தெருவோரம்
நானும் நீயும்.....
தியாகங்கள் செய்து காதலித்த நமது காதல்
யாரோ ஒரு வழிப் போக்கனால் கத்தரிக்கப்பட
காதல் அநாதையாய் அலைகிறது...
ஞாபகமிருக்கிறதா...?
பள்ளிக்கூட பலாமரத்தடியில்
காதல் கடிதங்கள் பரிமாறியது...
காதல் கடிதங்கள் மீதமிருக்க..
நானும் நீயும்
யாரோ ஒருவனால் முகவரி தொலைக்கப்பட்டிருக்கிறோம்..
பாவம்..பள்ளிக்கூடமும்,பலாமரமும்.......
வயிற்று வலியால்....
வகுப்புக்கு வராத போது
துடி துடித்துப் போனேன்...
என்னை நீ ஆசுவாசப்படுத்தினாய்..
இப்போது நீ இடுப்பு வலியால் துடிக்கிறாய்..
உன்னை யார் ஆறுதல்படுத்துவார்......
சத்தியம் செய்து
நமது காதல் ஒப்பந்தமானது
அப்படித்தான் அந்த நாட்களும் நகர்ந்தது..
ஆனால்,எவனோ ஒருவன் இன்று கிழித்து வீசியுள்ளான்
நமது காதலை.......
நீண் இடவெளிக்குப் பின்னர்
நானும் நீயும் சந்தித்தோம்..
விழிகள் பேசத்துடித்தது....
ஆனால்,தூரத்து உறவுகளைப் போல் பிரிந்து போனோம்...
யாரோ ஒருவனின் சூழ்ச்சி பலித்திருக்கிறது....
Thursday, June 2, 2011
உன்னைத் தேடி .......
உன்னைத் தேடி அலையும்
பயணம் நீள்கிறது..
உன் அன்பை நேசிக்கும்
என் இதயம் வாடுகிறது................
வெயில் ஊற்றும் நீரில்
என் மேனி நனைகிறது........
உன் தெருவோர வெக்கையில்
என் பாதம் கொப்பளிக்கிறது.........
அன்பை யாசிக்கும்,
பிச்சைப் பாத்திரமாய் நான்....
உன் வாசற் படியோரம்.....
கட்டி வைத்த நாயை
எட்டி ஓட வைத்து வேடிக்கை பார்க்கும்
எஜமானியாய் நீ...
இரும்புச் சங்கிலியாய்
இருக்க வேண்டிய நமது காதல்
காகிதச் சங்கிலியாய் தேய்ந்து போகிறது..
பாவம்...நமது காதல் காற்றடித்தால் அறுந்து போகும்...
உன்னை நேசிப்பதில்
என் சுயத்தை இழக்கிறேன்..
என்னை பித்தனாக்கி
என் நிழலில் உன்னை தேடுகிறேன்...
ஆனால் நீயோ.....!
ஒட்டி வரும் நமது உறவை
புறங் கையால் எட்டி தள்ளுகிறாய்...........
Monday, May 16, 2011
களவு போகும் ஞபாகம்...
வானம் கறுத்து
பயமுறுத்தும் இரவிலும்
நாய் குரைத்து பேய்கள் ஊளையிடும் பொழுதிலும்
நீ எனக்குள்
சாரலாய், சாமரமாய்,சில நேரம் தென்றலாய் வருடுகிறாய்..
உன் ஞாபகங்களால் என்னை போர்த்திக் கொள்கிறாய்.......
விழி திறந்து....
உன்னை தேடுவேன்.....
எட்டாத தூரத்தில் நீ இருப்பாய்...
அடையமுடியா ஒன்றுக்காய் கொட்டாவி விட்டதாய்
ஏமாந்து போகும் என் மனசு....
பக்கத்தில் நீ இருப்பாயென காத்திருந்து...
நொந்து கொள்ளும் என் விழி......
நொந்து நகரும் நாட்களில்
நெஞ்சோரம் வந்து ஆறுதல் சொல்லும்
பக்குவமான உன் வார்த்தைகள்..
சில நேரம்..
வெறுப்போடு கழியும் பொழுதுகளை
விருப்பமுள்ளதாக்கும் உனதான காதல்....
தூரமாகிப் போன நமது காதலை
நேற்று ஞாபகப்படுத்தினாய்
அப்போது...
உன் வார்த்தைகள் பனித்துளியாய்
என்னை நனைத்தன....
அது
அழகாய் மிக அழகாய் என்னை பரவசப்படுத்தின...
இப்படியெல்லாம் இருக்கும் நீ..
நினைவுகளோடு மட்டும்தான்
என்னோடுயிருக்கிறாய்....
என் நினைவின் சொந்தக்காரியே..!
இரவும் பகலும்
மாறி மாறி
என்னை வேட்டையாடிக் கொண்டிருப்பதை அறிவாயா..?
Subscribe to:
Posts (Atom)

















