Monday, June 20, 2011

உனதான வழியில்.......

பாசம் காட்டத் தவறியதில்லை...
பாதை விலகும் போது கண்டிக்கத் தவறியதுமில்லை...
பிரியாமல் பலதை புரியவைத்தாய்..
பலர் போற்றும் வாழ்வை படிப்பித்தாய்....அதனால்,
பாசமுடன் நெஞ்சுக்குள் வைத்திருக்கிறோம் தந்தையே....!

பிஞ்சு நான் தின்னையில் தவழ்கையில்...,
அள்ளியெடுத்து உச்சிமோர்ந்து கொள்வாய்..
மிட்டாய்க்காய் அடம்பிடிக்கையில்...
மிரட்டாமல் வாங்கித் தருவாய்...
காற் சட்டையோடு ஓடி விளையாடும் போது..,
கவனமாய் பார்த்து நிற்பாய்...

ஏடுகள் படித்து வாழ்வில் உயர..,
ஏணிப்படியாய் இருந்தீர்கள்...
கை பிடித்து பள்ளிக்கு கூட்டிப்போனீர்கள்..,
விரல் பிடித்து எழுதப் பழக்கினீர்கள்...
நெறி தவறா வாழ்வைச் சொல்லித் தந்தீர்கள்....
ஐவேளை தொழுதிட பள்ளிவாசலுக்கும் அழைத்து போனீர்கள்...
எங்கள் வாழ்வில் வெற்றிபெற பாலமாய் இருந்தீர்கள்..
அதனால்..,பத்திரமாய் நெஞ்சுக்குள் வைத்திருக்கிறோம்...தந்தையே....
பண்புடன் நீங்கள் வாழ்வதால்..,
பாசத்தோடு பார்ப்போர் பலர்..
பண்பு தவறக்கூடாது என்பதற்காய்..
ஒழுக்கமாய் வாழப்பழக்கினீர்கள்..
அதனால்..அடக்கமாய் வாழக்கற்றுக்கொண்டோம்.....




வறுமை எங்களை சூழ்ந்த போது..,
எங்கள் வயிற்றை நிரப்பி.....,
உங்கள் வயிற்றை வெறுமையாக்கினீர்கள்..
எங்கள் கண்ணீரை துடைப்பதற்காய்....
நீங்கள் கஷ்டப்பட்டீர்கள்.....
நாங்கள் உருவாக வேண்டுமென்பதற்காய்...
நீங்கள் உருக்குலைந்தீர்கள்..
ஆக..,எங்கள் வாழ்வின் பொக்கிஷம் நீங்கள்தானே....

பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை..,
ஒளி விளக்காய்யிருந்த தந்தையே...
வயது போனதாய் நீங்கள் கவலைப்படக்கூடாது..
எங்கள் வீட்டில் நீங்கள்தான் பல்கலைக்கழகம்...
உங்கள் கனவுகளை நிஜமாக்கிப் பயணிப்போம்...
உங்கள் வழியில்...எங்கள் தந்தையே......

4 comments:

  1. பாசமுள்ள உங்கள் தந்தை இன்னும் பல்லாண்டுகள் சந்தோஷமாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.. அவரது சந்தோஷம் தங்களின் மூலம் பெருகவும் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. நன்றி தோழி சப்னா.....உங்கள் தந்தைக்காகவும் பிரார்த்திக்கின்றேன்..

    ReplyDelete
  3. மன்னிக்க வேண்டும்... என் தாயின் கருவரையிலிருந்து நான் வெளிவருமுன்னே என் தந்தை இறையடி சேர்ந்துவிட்டார்.இருந்தாலும் நன்றிகள்.

    ReplyDelete
  4. தந்தை இல்லையே என்ற கவலை உங்களை அவ்வப்போது தனிமையில் அழ வைத்திருக்கலாம்.இருந்தாலும் உங்கள் தாய் அப்படியெல்லாம் நீங்கள் இருக்க்ககூடாது என்பதற்காய் மிக மிகவும் பாசம் காட்டி வளர்த்திருப்பார்கள்,ஆக மரணித்துப் போன உங்கள் தந்தைக்காய் என்றென்றும் பிரார்த்தியுங்கள்...

    ReplyDelete