Tuesday, June 21, 2011

காற்றலையில் பேசிய கவிதை......

தாலி கட்டி உனக்கு விலங்கிடவில்லை...
தாலி கட்டி உனக்கு சிறகுகள் தந்திருக்கிறேன்....
தாராளமாய்...நீ..விரிக்கலாம்.....

******************
கண்ணீர் சிந்தினேன்...
அது மழையாகப் பொழிந்தது...
காதலை தூவினேன்..
அது நிலவாக குளிர்ந்தது.......

**************


நீ இரவுகளின் ஒளியா..
அல்லது என் வாழ்வின் அமாவாசையா....
நீ என் கனவுகளின் நினைவா...
அல்லது என் வாழ்வின் புகைப்படமா....
நீ  என் எதிர்காலத்தின் தோரணங்களா....
அல்லது என் இளமையின் ரணங்களா.....?

*********************
தீக்குச்சி பற்றிக்கொண்டால்,
காற்று அணைத்துவிடும்...
நம் பார்வை பற்றிக் கொண்டால்...,
யார்தான் உண்டு அணைப்பதற்கு......

**********************
அவதாரங்களையும்,தீர்க்கதரிசனங்களையும்..,
பெறுகிறவள் நீ.......
அவமானங்களையும்,தரித்திரங்களையும்...
பெறுகிறவன் நான்......

***********************
இமைகளால் மூடிக் கொள்ளும் விழிகளையும்..,
உதடுகளால் போர்த்திக் கொள்ளும் வார்த்தைகளையும்..,
மறைத்து வை.......
ஆனால்,உன் மனக்கதவை எனக்காக திறந்து வை.......

**********************
உன்னை தேடுகிறேன்....
எந்தத் தேசத்தில் இருக்கிறாய்...
நிரந்தரமில்லா பிரிவில் முகவரியை தொலைத்திருக்கிறாய்..
சிறகுகளை கட்டிக்கொண்டாவது உன்னை சேர்வேன்
அந்த நம்பிக்கையோடு நானிருக்கிறேன்......

**********************
கண்களை இறுக மூடிக்கொண்டாலும்...
காதலின் இறுக்கம்....
என் நெஞ்சுக்குள் சுடர்விட்டெரிகிறது...
அதை உன் மனமறியுமா...?

***********************
நீ வந்த போது..,
வாழ்வுக்காய் போராடிய மனம்..,
நீ போன பிறகு..,
வாழ்வு மரணத்திற்காய் போராடுகிறது.....

********************
கனவுகளை சுருட்டிக்கொண்டு..,
இரவுகள் விடிவதை விட..
நான் உன் விழிகளில் விழும் வரை..
விடியாத இரவுகளாகயிருக்கட்டும்.......

**********************
சந்தோஷங்களால் சங்கீதம் இசைக்கும் நீ....
உன்னை பார்க்கத் துடிக்கும்..
என் மனதின் சோகம்..
என் இசைத் தட்டுக்குள் ஒலிப்பதை உன் மனமறியுமா..?

**********************
நானும் நீயும்
வாழ்க்கைச் சமூத்திரத்தில்..,
கரையில் இருந்து நீச்சலடிக்கிறோம்..
பாவம்..,வாழ்க்கை எட்டாத தூரத்தில்..
உனக்கும் எனக்கும்.....
********************
அந்திப் பொழுதில்..,
நிழல்கள் நீள்வதைப் போல்..
நீயில்லாத இரவுகளில்...
உன் நினைவுகள் என்னுள் நீள்கிறது.....

*****************
நான் கரையில் நின்றழுது...
காதலைத் தேடினேன்....
நீயோ..,கடலில் குதித்தல்லவா.
காதலை நீக்க நினைக்கிறாய்.....

**********************
இரவுகளின் தாலாட்டில்...
உறவுகள் தூங்கியிருக்க...
அந்த இரவுகளிலும்..
நாம் முரண்பட்டுக் கொள்கிறோம்.......
******************
உன் இதயத்தை..,
பூந்தோட்டமாக வைத்திரு....
அதில் வண்டாக..,
நான் வருவேன்...காத்திரு......

********************

(...வசந்தநிலா நிகழ்ச்சியின் போது பாடல்களுக்கிடையில் நான் சொன்ன கவிதைகள் இவை..,
இரவுகளைத் தாலாட்டும் அந்த இரவுகளில் அதிகம் சோகப்பாடல் ஒலிபரப்புவதால். அதற்கான கவிதைகளும் சோகமானவைதான்...வாசித்துப்பாருங்கள்.....)

2 comments:

  1. அட பார்ரா நம்ப அஸ்கர. என்னா அழகு என்று பொய் சொல்ல மாட்டேன்.. கவிதையில் ஆரம்ப வரி தொடக்கம் இருதி வரி வரையான அதன் அர்த்தங்களின் தொடர்பை கொஞ்சம் கவனத்தில் கொண்டீர்களென்றால் மேலும் அர்த்தப்படும்.. அழகான வரிகள்... மேலும் அழகு பெரும்.

    ReplyDelete
  2. தோழி சப்னாவுக்கு நன்றிகள்...பாடல்களுக்குப்பொருத்தமான கவிதைகளை எழுதி பாடல்களை ஒலிபரப்பி நேயர்களின் இதயத்தை தொட்ட நிகழ்ச்சிதான் வசந்தநிலா...அதில் சொல்லப்பட்டகவிதைகள் நேயர்களின் உணர்வுகளுடன் பேசப்பட்ட கவிதை...அஸ்கர் என்னா அழகு என்று பொய் சொல்லமாட்டேன் என்று கவிதை அழகா சொல்லியிருக்கிறீங்க....

    ReplyDelete