Tuesday, October 25, 2011

நீ அப்படியில்லை


நமது உடல்களின்
எங்கே ஒரு கோடியில்
எல்லைகளற்ற பாசம்
குடி கொண்டிருக்கிறது
ஆனால்,முரண்பாடுகளால்
இடவெளியை ஏற்படுத்திக் கொள்கிறோம்...

நானும் நீயும்
ஒத்திசைவற்றவர்களென
நீ அடம்பிடித்து நிற்க
நேர்மையின் கோட்டில்
எனக்குள் ஏற்றி வைக்கப் பட்ட காதலை
அதன் வலியை
எத்தனை முறை
கதறிக் கதறிச் சொல்லியிருப்பேன்...

இருட்டில்,
தலையணையை துணைக்கெடுத்து
அழுது உணர்ச்சிகளை கொட்டுகிறவள்
எனது உணர்வுகளை விலக்கி வைத்து
கல்லாயிருக்கிறாள்...

எனக்குத் தெரியும்
பூனைக் குட்டி மாதிரி
துள்ளித் திரியும்
அவளது வெள்ளை மனதில்
எனக்கான பாசம் இருக்கிறது
ஆனால்,மனச்சாட்சியிடம்
முட்டி முட்டி பின் வாங்குகிறாள்...

அழுகை,தவிப்புக்கள்
இருட்டின் அரவணைப்புக்கள்
என்னைப் போல் உனக்குமுண்டு
ஆனால்,ரோஜாப் பூப் போல்
உடம்பை வைத்திருக்கும் நீ
என்னைப் போல்
எப்படி தாங்குவாய்...



1 comment:

  1. சொல்வதற்கு முன்னுள்ள காதல் வெளிப்பாடுகளை வடிவமைத்த விதம் அருமை. நல்லதொரு கவிதைக்கு நன்றி. பாராட்டுக்கள். http://uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=4919 சமயம் கிடைக்கையில் இதையும் படித்துப்பார்க்க்வும் நன்றி.

    ReplyDelete