Sunday, December 19, 2010

மனித வாழ்க்கை எத்தனையோ சம்பவங்களால் பிண்ணப்பட்டிருக்கிறது..........


இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில்,பிறந்து,வளர்ந்து பட்டாம் பூச்சியாய் சிறகடித்து பறந்த சுமையா திருமணத்திற்கு பிறகு தன் கணவரோடு தலை நகரில் வாழ்கிறாள்.இவர்களின் வாழ்க்கையின் ஆரம்பம் மகிழ்ச்சி நிறைந்ததாக காணப்பட்டது.எந்தவித குறையுமின்றி, கண்காணித்து வந்தான் சுமையாவின் கணவன் றமீஸ்.தலைநகரின் பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில்,காலப்போக்கில் றமீஸ் வியாபாரம்,பணம் என்று வாழத் தொடங்கினான்.இப்படியாக தன் நேரங்களை செலவழிக்கத் தொடங்கிய றமீஸின் இதயத்தில் நிறைந்திருந்த மனைவி சுமையா  கொஞ்சம் கொஞ்சமாக தூரப்போகிறாள்.பணம்,பணம்.என்று ஓடத்தொடங்கியதால், றமீஸ் நேரத்திற்கு வீட்டுக்கு வருவதுமில்லை,முன்னரைப் போல் மனைவி சுமையா மீது அவன் அன்பு காட்டுவதுமில்லை.இதனால் இருவருக்குமிடையில்,முரண்பாடுகள் அடிக்கடி எழத் தொடங்கின.அன்பு வார்த்தைகளை மட்டும் ஆரம்பத்தில் பேசி மகிழ்ந்த இந்த தம்பதிக்ள் பின்னர் வம்பு வார்த்தைகளையும் பிரயோகிக்கலாயினர்.
உறவுகளையும்,தான் வாழ்ந்த ஊரையும் விட்டு,கணவனோடு வாழ வந்த அவளுக்கு,கணவரின் இந்தப்போக்கால், வாழ்க்கையே வெறுத்துப்போனது.தனிமையும்,கணவரின் முரண்பாடும் சுமையாவை சோகம் குடி கொண்டது.இப்படியே பெருமூச்சுவிட்டு நிமிடங்களை நகர்த்திக் கொண்டிருக்கும் அவள்.வாழ்க்கையின் பயணத்தோடு கை கோர்த்த கணவனை விட்டு பிரியமுடியாமலும்,வாழவும் முடியாமலும்.,வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்களையும்,மனக்கவலையோடு கழித்துக் கொண்டிருக்கிறாள் .
 
.........இப்படி எத்தனையோ பெண்கள் மனசுக்குள் தங்களது சோகங்களை புதைத்து புதைத்து வாழ்கின்றனர்.இவர்களின் மன எண்ணங்களை வெளிக்கொணர,நேயர்களின் கவிதைக்காய் வசந்த நிலாவில்,நான் ஒலிபரப்பிய பிரதி.....................

1 comment:

  1. கதையா அல்ல நிஜமா . . . என்றாலும் பெண்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு சாதிக்கிறார்கள். . . உள்ளத்துக் கவலைகளை வெளிக்காட்டாமல் தான் பல பெண்கள் வாழ்கிறார்கள்.

    ReplyDelete