Friday, December 10, 2010

வசந்த நிலா.....


தரிசனத்திற்காய் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தால்,ஒரு இளம் பெண்,போய்க்கொண்டிருந்த வழியில் பூக்கள் நிறைந்த மரத்தை காண்கிறாள்.அந்த மரத்தில் ஏராளமான பூக்கள் காணப்படுகின்றன.அவளது கண்களை கவர்ந்த அத்தனை பூக்களையும் பறித்துக் கொள்கிறாள்.ஆனால்,மரத்தின் உச்சியில் அழகாய் ஒரு பூ பூத்திருக்கிறது.அவள் அந்தப் பூவையும் பறிப்பதற்காய் எட்டி,எட்டி எத்தனிக்கிறாள்.அவளால் முடியவேயில்லை.எல்லாப் பூவையும் பறித்தவள் அந்தப் பூவை மட்டும் விட்டு விட்டு போகிறாள்.மரத்தின் உச்சியில் பறிக்க முடியாமல் தனிமையாகயிருக்கும் அந்தப் பூ அவளைப்பார்த்து என்ன சொல்லியிருக்கும்...........................

................இது 25.10.2010 திங்கள் வசந்த நிலாவில் நேயர்களின் கவிதைகாய் நான் சொன்ன சம்பவம்..............

2 comments:

  1. அவ்வளவு பூக்களையும் தரிசனத்திற்கு படைத்துவிட்டு வரும்போதாவது என்னை உன் கைகளில் ஏந்துவாயா பெண்ணே? உனக்கான மலர் நானல்லவா! என்று சொல்லியிருக்கும்..

    ReplyDelete
  2. கற்பனைக்கு நன்றி சப்னா.....இந்த சம்பவத்தினை நான் வானொலியில் நேயர்களின் கவிதைக்காக கூறிய போது..அப்பப்பா......ஒவ்வொரு நேயர்களும் வித்தியாசமான கற்பனையில் காத்திரமான கவிதைகளைச் சொன்னார்கள்...அப்போது கேட்பதற்கு மிக மிக அருமையாகயிருந்தது......

    ReplyDelete