Monday, December 13, 2010

இழத்தல்.........

ஏதோவொன்றை
இழந்துவிட்டதாக
ஒவ்வொரு இரவும்
விடிந்து போகிறது....

கனவுகளில்
இழந்தவைகள் அதிகம்
அது..
விழித்ததும் பொய்யாகிப் போகும்
ஆனால்,
நிஜத்தில் இழந்தவைகள்
இன்னும் மனதை உலுக்குகிறது
காலங் கடத்தும்....

இழந்தவைகள் பல
சில இழப்புக்கள்
வலிகளைத் தந்து
பின்னர் மறைந்து போகும்...
இன்னும் சில இழப்புக்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
சாகடித்துக் கொண்டிருக்கும்
தீராத நோயைப் போல்....
இழப்புக்களின்றி வாழ்வேது....?

காதலின் இழப்பு
திருமணத்தின் பின் மறந்து போகும்
பின்னர் சுகமான வலிகளைத் தரும்..
அது மனசுக்குள்ளேயே அடங்கிப் போகும்...
தெருவெல்லாம்
சுற்றித் திரிந்த
நண்பர்களின் இழப்புக்கள்
தரும் வலி...அது சோக வலி
உறவுகளின்
இழப்புக்கள் தரும் வலி
அது  மீளாத
துயர் நிறைந்த வலி....

ஆனால்..,
மூன்றையும்
இழந்து தவிக்கும் வலியை
என்ன வலியென்பது தோழா...?

நிஜத்தில் நடந்த
சில இழப்புக்கள்
கனவாகிப் போகக் கூடாதா...?
இப்படி ஏங்கி
பின்.,ஏமாறுவதுமுண்டு
ஏமாற்றமும் ஒரு இழத்தல்தானே......

இழப்புக்களின்
அவலத்தை சுமந்து
அல்லலுறும் என் மனசை
ஆறுதல் படுத்தும்
சில உறவுகள்....
ஒவ்வொரு நிமிடமும்
கடந்து போகும்
ஆறாத சுமைகள் நிறைந்ததாக........

சில கணங்களில்
இழப்புக்களில்
இன்னுமொரு இழத்தலாக
நானிருக்கக் கூடாதா.....
இப்படி சிந்தித்து..
பின் சிந்தனையை நொந்ததுமுண்டு......

எப்படியிருந்த போதிலும்.
இப்போதெல்லாம்
ஏதோவொன்றை
இழந்ததாய்
ஒவ்வொரு இரவும்
விடிந்து போகிறது............
        
ஏ.எம்.அஸ்கர்....

2 comments:

  1. சில இழப்புகள் மீண்டும் ஏதோவொன்றின் மூலம் மறையக்கூடியவை. இழப்புகள் கூட வாழ்க்கைக்கான பாடங்களே..

    ReplyDelete
  2. நன்றி சப்னா....இழப்புக்ளில்தான் மீட்சியிருக்கிறதா..?வாழ்ந்துதான் பார்ப்போம்.....

    ReplyDelete