Thursday, December 9, 2010

காற்றலையில் உங்களோடு..............

மனங்கள் மௌனமாக பேசிக் கொள்ளும் இரவுகளில்,உங்கள் இதயங்களோடு பேசிக் கொண்ட என் கவிதைகள்.......................




நிமிடங்கள் நகர மறுத்தாலும்
உன் பேரை உதடுகள் உச்சரிக்கத் தவறுவதில்லை
இப்படியிருந்தும்..,
நமது தரிசனத்தை...,ஏன் தரித்திரமாக்குகிறாய்..
******************************


ஒவ்வொரு இரவிலும்
இசைத் தட்டுக்களுக்குள்
கலந்து போகும்
என் உயிரின்.....உயிர் நீ.........
****************************

தினம் தினம்
எத்தனை பிரார்த்தனைகள் உனக்காய்
எப்படி இருக்கிறாய்
அஞ்சலிடு உன் நலத்தை.........
********************************


அழைத்து அழைத்து
இந்த நெஞ்சம் வலிக்குது
வலிகளுக்கு நிவாரணமாய்
எப்போது வருவாய்......
*********************************

இரவுகளை
கனவுகளால்
அழகு படுத்தும்.....அழகு தேவதை நீ..........
*************************************

நீ
தூரமான போது
இதயத்தின் துடிப்பு இரட்டிப்பாகிறது
இரவுகளில் சில பாடல்கள்
என்னை ஆசுவாசப் படுத்துகிறது.....
************************************

குறைகளோடு பிறக்கும்
என் கவிதைகள்
உன் முகவரியைத் தேடி
பயணிக்கின்றன ஒரு வழிப் போக்கனாய்......
*************************************

உன் வரவுக்காய்
முகவரி தேடுகிறேன்
தபால் காரனாய்
மறைத்து வைத்திருக்கிறாய் உன் முகவரியை....
*************************************

சின்னக் குயிலே
உன் சின்னப் பெயர்
என்ன அழகாயிருக்கிறது
*********************************

கூடி வந்த வேளை
கலைந்து போன காதல்
தூர நின்று
கெக்கலித்துச் சிரிக்கிறது....
*****************************

முகம் பார்த்து
கதை பேசி மகிழ
காதல் தேவதை எப்போது வருவாள்........
**********************************
என் கவிதைகளில்
உன்னை வைத்தேன்
உன் விழிகளில்
என்னை வைத்தாய்....
**************************

கையசைத்து
தூர விலகிப் போன புள்ளி மானே
என் காதில் சங்கீதம் பாட
எப்போது வருவாய்
****************************

வாரறுந்த பாதணியைப் போல்
வீசப்பட்டுக்கிடக்கிறது
தெருவோரம்...சிலரது வாழ்க்கை.....
*****************************

இல்லாதோரின் வார்த்தைக்கு
எங்குதான் கேள்வியுண்டு
காதலிலும் அப்படித்தான்....
****************************

மனதில் எழுந்த
மயக்கங்கள் மறந்து போகும்
நினைவில் தவழ்ந்த
நிகழ்வுகள் மறைந்து போகும்
கனவில் கண்ட காட்சிகள் கலைந்து போகும்
உயிரில் கலந்த உறவு மட்டும்
எங்கு கோகும்.............

2 comments:

  1. மக்களே, பாவம்ங்க இந்த அஸ்கர்.எப்ப பார்த்தாலும் புலம்பிக்கிட்டே இருக்கு இந்த மனுசன்..இவர் யாரை என்னி கவிதை பாடுராரோ? யார் தான் இவர் நெஞ்சை புண் செய்தாரோ? ம்ம்ம்...கண்ணதாசன் போல் இவரும் அவரது நிஜங்களை கவிதையாக்குகிராறோ?

    ReplyDelete
  2. நன்றி சப்னா....புலம்பல் இல்ல,பாட்டுக்கேற்ற கவிதை...அதற்காக என்ன பாட்டு என்று கேட்காதீங்க............

    ReplyDelete