Tuesday, December 7, 2010

இழப்புக்களின் வலி.........

என்னை நினைத்து....நீ..
கண்ணீர் விடுவது..
எனக்குத் தெரியும்....அது...
ஏக்கப் பெருமூச்சுடன் என்னை தாக்குகிறது........

நமது பிரிவுகளின்
ஆயிரம் சோகங்களை...நீ..
அழுகையால் தேற்றிக் கொள்கிறாய்..
உன் எண்ணங்கள்...... என்னை அதிர வைத்து..
ஆயிரம் துயரம் சொன்னது...........


நானும்.....நீயும்.....
நடந்து சென்ற உன் தெருவில்..
என் பாதச்சுவடுகளை தேடுகிறாய்..
பின்னர்..,ஏமாந்து போகிறாய்...

உனக்குச் சொந்தமென்றிருந்தால்.,
ஆயிரம் கவிதைகளை விதைத்திருப்பேன் உனக்கு...
என்ன செய்யலாம்...விதி.....
உன்னையும்..,என்னையும்..
பிரித்து வைத்திருக்கிறது.......


என்னையிழந்து..
தினம் நீ அழும் ஓசை.
என்னுள் எதிரொலிக்கிறது...பேரிடியாய்.........

பிரிவுகளை விரும்பியா...ஏற்றுக் கொள்கிறோம்..
ஏற்றுக் கொண்டுதான் பிரிந்து போகிறோமா....?..

என்னை நினைத்து
நீ கண்ணீர் விடும் சோகம்
என் ஒலித்தட்டுக்களில்..
சோகக் கீதமாய் ஒலிக்கிறது................

2 comments:

  1. என்ன அஸ்கர் எப்ப பார்த்தாலும் பிரிவு,சந்திப்பு,நினைப்பு,மறப்பு என்று உங்க சொந்தக்கதையை கொட்டித் தீர்க்குரிங்க? மிச்சம் சோகம் போல?

    ReplyDelete
  2. வரவுக்கு நன்றி சப்னா.......அப்புடி....இப்புடி.....ஒன்றுமில்லை,துப்பவும் ..,விழுங்கவும்...முடியாமிலிருக்கும் சிலரின் எண்ணங்களை, கவிதையில் தந்துள்ளேன்.அவ்வளவுதான்....

    ReplyDelete