Monday, December 27, 2010

வசந்த நிலா.......இது உணர்வுகளின் பகிர்வு......................


மெல்லவும் முடியாமல்,துப்பவும் முடியாமலும்,வதை செய்து கொண்டிருப்பதுதான் ஒரு தலைக்காதல்.இப்பேடியதான் காதலை தன் மனதுக்குள் வைத்திருக்கிறார்கள்.சியாத்தும்..,சியாமாவும்..இரண்டு பேரும் பல வருடங்களாக பழகி வருகின்றார்கள்.இவர்களுக்குள் ஏற்படுகின்ற சந்தோஷங்களையும்,சோகங்களையும்,மனமிட்டு பரிமாறிக் கொள்ளுமளவுக்கு இவர்களது உறவு நீடிக்கிறது.இப்படியாக பழகுதல் தொடர காலங்கள் உருண்டோடுகின்றது.ஒவ்வொரு நாளும் நகர நகர கருவில் இருக்கும் சிசு வளர்வதைப் போல்,இவர்களுக்குள் துளிர்விட்ட ஒருதலைக்காதலும் வளர்கிறது.நட்பு ரீதியாக எவ்வளவோ பேசியிருக்கிறோம்.இரண்டு பேரும் பேசிப் பிரிகின்ற பொழுதுகளில் கண்களில் ஆயிரம் காதல் தெரியும்,ஆனால் அந்த காதலை வெளிப்படுத்த முடியவில்லை.
காதலை யார் முதலில் சொல்வது என்பதில் இருவருக்குமிடையில் ஒரு போராட்டம்.நாளாந்தம் உணர்வுகளை மௌனமாக்கிப்போகும்.இந்த இரண்டு இதயங்களையும் பார்த்து நான் இப்படிச் சொன்னேன்.......



உன் அழகிய திருமுகத்தைக் காண ஏங்குகிறேன்...
ஆசையோடு உன் வரவுக்காய் காத்திருக்கிறேன்.......
இமை கூட மூடாமல் விழித்திருக்கிறேன்.........
ஈவிரக்கம் காட்டமாட்டாயா....?
ஊஞ்சலாடும் மனதை அடக்க முடியாத நான்..,
என் மனதையே புரிந்து கொள்ள முடியாத நான்...,
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் உன் பதிலுக்காக...............

(வசந்த நிலா நிகழ்ச்சியில் நேயர்களின் கவிதைக்காய் ஒலிபரப்பான பிரதி...15.07.2010)

2 comments:

  1. இரண்டு இதயங்களையும் பார்த்து மூன்றாமவராய் ஒரு கவிதை சொல்லுங்களே... "மென்று விழுங்க முடியா அவளும்,சொல்லிப் பிழைக்குமோ என்று அவனும்...தடுமாற்றங்களுடன், நற்புக் கருவரைக்குள் நிறை மாதமாய்த் தடுமாறிக் கொண்டிருக்கும் காதல் சிசுவை பிரசவிக்கப் போவது அவனா?அவளா?"

    ReplyDelete
  2. நன்றி..சப்னா..உங்கள் வரிகள் அழகாயிருக்கிறது வாழ்த்துக்கள்...தொடரட்டும் உங்கள் கற்பனை......

    ReplyDelete